பதற்றத்தை ஏற்படுத்திய உளவு பலூன்.. எச்சரித்த சீனா - 'அந்தர் பல்டி' அடித்த அமெரிக்கா.. நடப்பது என்ன?
வாஷிங்டன்: அமெரிக்காவை ராட்சத பலூன் மூலம் சீனா உளவு பார்த்த விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தையும், போர் சூழலையும் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீரென சமாதானக் கொடி பறக்க விட்டிருப்பது சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனாவை அமெரிக்க ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சீனா கடும் எதிர்வினை ஆற்றியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சீனாவுடன் பிரச்சினை செய்ய அமெரிக்கா விரும்பவில்லை என அதிபர் ஜோ பிடன் அறிவித்திருக்கிறார்.
உலக வல்லரசான அமெரிக்காவுக்கு உள்ளேயே உளவு பலூனை பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், மிரட்டல் மூலம் அமெரிக்காவை சீனா பணிய வைத்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவுக்கு அவமானம்
உலக அளவில் தற்போது எந்த நாட்டையாவது வம்புக்கு இழுத்து பிரச்சினை செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது சீனா. இந்தியா, பூடான், தைவான் உள்ளிட்ட நாடுகளிடம் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு வரும் சீனா, தற்போது படிப்படியாக அமெரிக்காவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. ராட்சத பலூன் மூலம் அமெரிக்காவையே உளவு பார்க்கும் அளவுக்கு சீனா துணிந்ததுதான் தற்போது உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், உலக வல்லரசு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவை சாதாரண பலூன் மூலமாக சீனா உளவு பார்த்தது அந்நாட்டுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொந்தளித்த அமெரிக்கா
இதனிடையே, சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் முக்கிய ராணுவ மையங்கள் மீது பறந்ததால் அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் கடும் ஆத்திரம் அடைந்தது. இந்த உளவு பலூன் விவகாரத்தை அமெரிக்கா கைக்கட்டி வேடிக்கை பார்க்காது என்றும், சீனா இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும் என எச்சரிக்கை தொனியில் பென்டகன் தொடர்ந்து சீறியது.

சீனா எச்சரிக்கை
இந்த சூழலில்தான், அந்த உளவு பலூனை அமெரிக்க ராணுவத்தின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தின. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீனா, "பருவநிலை ஆராய்ச்சிக்காக தாங்கள் விண்ணுக்கு அனுப்பிய பலூனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தியிருப்பது சரியான நடவடிக்கை அல்ல. இதற்கான பதிலடியை தருவதற்கு சீனாவுக்கு உரிமை உள்ளது" என எச்சரித்திருந்தது.

பின்வாங்கிய ஜோ பிடன்
இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. "உளவு பலூன் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்குமா?" என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், "சீனாவுடன் போட்டியிட அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால், அந்நாட்டுடன் பிரச்சினை செய்யவும், மோதல் போக்கை உருவாக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை" என்றார். ஜோ பிடன் இவ்வாறு திடீரென பின்வாங்கியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications