17 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த கொடூர செவிலியர்! விசாரணையில் திடுக் தகவல்கள்.. என்ன நடந்தது
வாஷிங்டன்: அளவுக்கு அதிகமாக இன்சுலின் செலுத்தி 17 நோயாளிகளைக் கொலை செய்த செவிலியருக்கு 700 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நமக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது செவிலியர்கள் தான் நம்மைக் கவனித்துக் கொள்வார்கள். மருத்துவர்கள் தினசரி ஓரிரு முறை தான் வந்து உடல்நிலையைப் பரிசோதனை செய்வார்கள்.

ஆனால், செவிலியர்கள் தான் எப்போதும் நம்முடன் இருப்பார்கள். ஆனால், சில நேரங்களில் நோயாளிகளை இந்த செவிலியர்களே கொடூரமாக எதாவது செய்து விடுவார்கள். அப்படியொரு பகீர் சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்தது.
இன்சுலின்: அங்குச் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு அதிக அளவு இன்சுலின் கொடுத்து கொலை செய்து வந்துள்ளார். இப்படியே அவர் மூன்று ஆண்டுகளில் 17 பேருக்கு இன்சுலின் கொடுத்து கொலை செய்துள்ளாராம். கடந்த 2020 மற்றும் 2023 வரை இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த வழக்கில் தான் அந்த செவிலியருக்கு 380-760 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியைச் சேர்ந்த 41 வயது செவிலியர் ஹீதர் பிரஸ்டீ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மீது மூன்று கொலை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 19 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனது. இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரணம்: அவர் மொத்தம் 22 நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் போட்டுள்ளார். சிலருக்கு நீரிழிவு நோய் இல்லாத போதிலும் அவர்களுக்கும் இன்சுலின் போட்டுள்ளார். நைட் ஷிப்டில் குறைந்த அளவே பணியாளர்கள் வேலை செய்வார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர் இன்சுலின் ஊசி போட்டுள்ளார். பெரும்பாலான நோயாளிகள் இன்சுலின் போடப்பட்ட உடன் உயிரிழந்துள்ளனர். சிலர் கொஞ்சக் காலத்தில் உயிரிழந்துள்ளனர். 43 முதல் 104 வயதான நபர்களை டார்கெட் செய்து அவர் இந்த செயல்களைச் செய்துள்ளார்.
பொதுவாக உடலில் அதிகளவில் இன்சுலின் செலுத்தப்பட்டால் அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கும். மேலும், அது இதயத் துடிப்பை அதிகரிக்கும்.. இதனால் மாரடைப்புக் கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
வழக்குப்பதிவு: கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகளைக் கொன்றதற்காக முதலில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் பல பகீர் சம்பவங்கள் தெரிய வந்தது.
இந்த செவிலியர் நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான நோயாளிகளைக் குறிவைத்து கொலை செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடந்த காலங்களில் இந்த செவிலியருடன் பணியாற்றிய சக செவிலியர்கள் இந்த நர்ஸின் செயல்பாடுகளைச் சாடியிருந்தனர். அதாவது தனது நோயாளிகள் குறித்து அவர் எப்போதும் மோசமாக திட்டுவது போன்ற கருத்துகளையே கூறுவாராம்.
புலம்பல்: அவரது தாயாருக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் கூட அவர் தனது நோயாளிகள், சக செவிலியர்கள் உட்பட அனைவரையும் திட்டியே மெசேஜ் அனுப்பி இருக்கிறார். மேலும், அவர்களைத் தாக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். .
நீதிமன்றத்திலேயே பாதிக்கப்பட்ட ஒருவரின் மகன் கூறுகையில், "அவருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. மன ரீதியான பாதிப்புகள் எதுவும் இல்லை. அவர் வேண்டுமென்றே தான் இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் என் தந்தையைக் கொன்ற நாளில் நான் அவரது முகத்தைப் பார்த்தேன்.. கொஞ்சம் கூட அவருக்குக் குற்ற உணர்வு இல்லை" என்றார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் அமெரிக்காவில் செவிலியர்களை நோயாளிகள் கொலை செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பல நோயாளிகள் தங்கள் நோயாளிகளைக் கொன்றதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். சார்லஸ் கல்லன் என்பவர் நர்சிங் ஹோமில் குறைந்தது 29 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதேபோல டெக்சாஸ் செவிலியர் வில்லியம் டேவிஸ் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமனிகளில் காற்றைச் செலுத்தி 4 பேரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications