வெள்ளி கிரகத்திற்கு 1,000 பேரை அனுப்ப போறோம்.. டைட்டன் நிறுவனத்தின் அடுத்த பிளானை பாருங்க
வாஷிங்டன்: வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றத்தை அமைக்க இருப்பதாகவும் ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி டைட்டன் நிறுவனம் அதிரவைத்து உள்ளது.
கடந்த 1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் சிக்கி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலின் சேதம் அடைந்த பாகங்கள் அமெரிக்காவின் நியூ ஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்ததை 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அவ்வப்போது ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தனர்.

இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றுலாப்பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்த நிறுவனத்தின் ‛டைட்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 பேருடன் பயணத்தை தொடங்கியது.
‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் தொடர்பை இழந்தது. இதையடுத்து 4 நாட்களாக தேடும் பணிகள் நடந்தன.
96 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு டைட்டன் நீர் முழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்ற அந்த நிறுவனத்தின் நிறுவனர் உள்பட 5 தொழிலதிபர்களும் பலியாகினர். உலகம் முழுவதும் இது பரபரப்பு செய்தியானது. இந்த விபத்து நடைபெற்று ஏறத்தாழ ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனம் அடுத்த டார்க்கெட்டை அறிவித்துள்ளது.
அதாவது வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றத்தை அமைக்க இருப்பதாகவும் ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி அதிரவைத்து உள்ளது. வெள்ளி கிரகத்தில் மனித குடியேற்றத்தை ஏற்படுத்துவது டைட்டன் நிறுவனத்தின் லட்சிய திட்டம் என்று தெரிவித்துள்ள OceanGate நிறுவனத்தின் இணை நிறுவனர் கியூல்லெர்மோ சோஹன்லீன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு "Humans 2 Venus" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தர சூழல் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications