அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறக்கும் நிலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைக்கும் ஊழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் 39,665,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6.54 லட்சம் பேர் இறந்துள்ளனர். 30,826,478 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதில் கலிபோர்னியாவில் 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு மட்டுமே 65 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1.69 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த சனிக்கிழமை நிலவரப்படி புளோரிடா மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

அங்குள்ள 1 லட்சம் வீடுகளில் 75 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அது போல் நோயாளிகளை கவனித்துக் கொள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், லவுசியானா ஆகிய பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பொதுவாக 90 சதவீதம் மட்டுமே சிலிண்டரில் ஆக்ஸிஜன் நிரப்பப்படும். 30 முதல் 40 சதவீதம் இருக்கும் போது அது மீண்டும் நிரப்புவது வழக்கம்.
தற்போது 10 முதல் 20 சதவீதம் வரையே ஆக்ஸிஜன் உள்ளது. இது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியே மீண்டும் நிரப்பப்பட்டாலும் 50 சதவீதம் மட்டுமே நிரப்புவர். இது மிகவும் மோசமான நிலையாகும் என்றனர். அது போல் அமெரிக்க மருத்துவமனைகளில் இறப்போரை வைத்திருக்க பிணவறைகளிலும் இடம் இல்லை.

டெல்டா வேரியன்ட் வகை வைரஸ் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இது வேகமாக நோயாளியின் நுரையீரலை தாக்குகிறது. இதனால் அவர்களது நிலைமை மோசமாகிறது. இது போல் நிறைய பேர் பாதிக்கப்படுபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள். 30, 40, 50 வயதினர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள தெற்கு கரோலினா, லவுசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் 50 சதவீத மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர். சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 52.1 சதவீதம் மக்களே முழுமையாக இரு டோஸ்கள் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.
Recommended Video
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications