ஆப்கானிஸ்தான் கதை முடியுதா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக வந்த டிரம்ப்.. உள்ளே வந்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ''இந்த போரில் நான் தலையீடு செய்வேன். எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுடன் ஏற்கனவே அமெரிக்காவுக்கு பகை உள்ளது. இப்படியான சூழலில் டிரம்ப் உள்ளே வருவதால் ஆப்கானிஸ்தான் நிலைமை என்னவாக போகிறது? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. நீண்டகாலமாக இருநாடுகள் இடையேயான மோதல் போராக வெடித்துள்ளது. கடந்த 22ம் தேதி திடீரென்று போர் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் சரமாரியாக குண்டு வீசின.

pakistan-afghanistan-war-us-backs-pakistan-amid-of-ongoing-clash-with-taliban

கிளர்ச்சி படையினர் மீது குண்டு வீசுவதாக சொல்லி விட்டு அப்பாவி பெண்கள், குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கொன்றது. இதனால் கொதித்துப்போன தாலிபான்கள் பாகிஸ்தானுக்கு நேற்று முன்தினம் இரவு பதிலடி கொடுத்தது. எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாலிபான்கள் தாக்குதல்கள் நடத்தினர்.

போர் அறிவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும் ''எங்களின் பொறுமை முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம். அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட திறந்த போர் தொடங்கி விட்டது'' என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.

தற்போது தொடர்ந்து இருநாடுகளும் பயங்கரமாக மோதி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீது ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் வீசுகிறது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்குள் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு இருநாடுகள் இடையே தரைவழி தாக்குதலும் நடக்கிறது.

இருநாடுகளுக்கும் இழப்பு

இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 55 ராணுவ வீரர்களை கொன்று குவித்ததோடு, அந்த நாட்டின் 19 ராணுவ நிலைகளையும் தாலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தான் தாக்குதலில் 133 தலிபான்களை கொன்றதோடு, 27 ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் பக்கம் டிரம்ப்

இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்துள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதலில் தலையீடு செய்வீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு டிரம்ப், "நான் தலையிடுவேன். பாகிஸ்தானுடன் எனக்கு நல்லுறவு உண்டு. பாகிஸ்தானில் சிறந்த பிரதமரும், ராணுவ தளபதியும் உள்ளனர். நான் மிகவும் மதிக்கும் தலைவர்கள் அவர்கள். பாகிஸ்தான் அபாரமாக செயல்படுகிறது" என்றார்.

போனில் பேசிய அமெரிக்கா

மேலும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் அலிசன் ஹூக்கர்
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் பலோச்சுடன் பேசினார். மோதல் விவகாரங்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அலிசன் ஹூக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''ஆப்கானிஸ்தான் தாலிபான் தாக்குதல்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் பாகிஸ்தானின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது. பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இருநாடுகள் இடையேயான நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'' என்றார்.

பாகிஸ்தான் – அமெரிக்கா நெருக்கம்

அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்பும், தனக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வலுவான உறவு இருப்பதாக கூறியுள்ளார்.டொனால்ட் டிரம்பின் இந்த நிலைப்பாடு ஆப்கானிஸ்தானுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பாகிஸ்தானுடன், அமெரிக்கா நல்ல உறவில் உள்ளார். டிரம்ப் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் -அமெரிக்கா இடையே பகை உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாலிபான்களுக்கு அமெரிக்க பரம எதிரியாக உள்ளது.

தாலிபான் – அமெரிக்கா பஞ்சாயத்து

கடந்த 2001ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா தான். அதன்பிறகு ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக அமெரிக்க படைகள் தங்கி தாலிபான்களை அதிகாரத்துக்கு வர விடாமல் தடுத்தது. கடந்த 2021ம் ஆண்டில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு தான் தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி அதிகாரத்தை கைப்பற்றினர்.

அதன்பிறகும் கூட அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இடையே மோதல் உள்ளது. தாலிபான்களின் ஆட்சியை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அக்ராம் - பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா தான் கட்டியது. இதனால் அதனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

ஆப்கனுக்கு சிக்கல்

ஆனால் ஆப்கானிஸ்தான் தாலிபான்களோ அந்த விமான தளத்தை ஒப்படைக்க முடியாது. அது சோவியத்யூனியனால் கட்டமைப்பு செய்யப்பட்டது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று கூறிவருகிறது. இது டிரம்புக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதலை காரணம் காட்டி டிரம்ப் என்ட்ரி கொடுக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அமெரிக்கா இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இறங்கினால் அது ஆப்கானிஸ்தானை நிலைக்குலைய செய்யும்.

ஏனென்றால் ஆப்கானிஸ்தானிடம் நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் கிடையாது. கடைசி வரை வீரமாக போராடும் வீரர்கள் மட்டும் தான் உள்ளனர். ஆனால் அமெரிக்காவிடம் அதிநவீன போர் விமானங்கள், தளவாடங்கள் உள்ளன. இது நிச்சயம் ஆப்கானிஸ்தானுக்கு பேராபத்தை விளைவிக்கும். இதனால் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போர் இன்னும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+