'படுபாதகம்' 9 சிறுமிகள்.. மகள் உள்பட 20 பேரை மனைவியாக்கிய கொடூரம்.. இதுல இவரு மத போதகர் வேற
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது சொந்த மகள் உள்பட 20 பெண்களை மத போதகர் திருமணம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
வெளிநாடுகளில் சில வினோத சம்பவங்கள் நடப்பது போல, நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சிகர சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சைக்கோக்கள் போல நடந்து கொள்ளும் சில கொடூர நபர்கள் தொடர் கொலைகளில் ஈடுபடுவது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது என மனித சமூகத்தையே வெட்கப்பட வைக்கும் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள்
இதுபோன்ற ஒரு மிருகத்தனமான ஒரு செயல்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- அமெரிக்காவை சேர்ந்த மத போதகர் சாமுவேல் ரப்பலே பேட்மேன். 46-வயதான ரப்பலே பேட்மேன் தன்னைத்தானே இறைதூதர் என்று அறிவித்துக்கொண்டு ஒரு குழுவின் மதபோதகராகவும் உள்ளார். சாமுவேல் ரப்பலே பேட்மேன் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சொந்த மகள் உள்பட 20 மனைவிகள்
அதாவது 20 க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தனது சொந்த மகளும் அடங்கும். இது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அரிசோனா மாகாண போலீசார், மதபோதகர் என்று தன்னை அறிவித்துக்கொண்ட சாமுவேல் ரப்பலே பேட்மேனை கைது செய்தனர். இதுமட்டும் இன்றி தனது குழுவில் உள்ள உறுப்பினர்களிடம், தங்கள் மைனர் மகள்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுத்ததாக சாமுவேல் ரப்பேல் பேட்மேன் மீது குற்றச்சாட்டு எழுந்தது இருக்கிறது.

சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள்
கடவுளுக்காக தங்கள் கண்ணியத்தை விட்டுக் கொடுத்தாலும் உங்கள் உடலில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து விடுவார் என்றும் கன்னித்தன்மை பாதிக்கப்படாது என்ற ரீதியிலும் சமுவேல் இந்த சிறுமிகளிடம் கூறி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொலராடாவில் உள்ள பேட்மேன் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து சில பொருட்களையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.

8 சிறுமிகள் வெளியே வந்ததால்...
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பேட்மேன் அரிசோனா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பேட்மேன் குழுவில் இருந்து 8 சிறுமிகள் தப்பி வெளியே வந்ததன் மூலம் இந்த படுபாதக செயல் நடைபெற்று வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனாலும் சிறுமிகள் யாரும் தங்களுக்கு பேட்மேன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

நடந்த எதையும் தெரிவிக்கக் கூடாது..
எனினும், பேட்மேன் அவர்களுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். விசாரணை அதிகாரிகளும் தங்களுக்கு நடந்த எதையும் தெரிவிக்கக் கூடாது என்று பேட்மேனின் மனைவிகள் இந்த சிறுமிகளை அறிவுறுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications