வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கியது " பனாமா".. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு.. அச்சத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பனாமா நாட்டின் மேற்கு பகுதியில் நகரங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

மக்கள் பீதி

மக்கள் பீதி

பனாமா நாட்டு நேரப்படி காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தலைநகர் பனாமா சிட்டி வரை உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். இதனால், காலை நேரத்திலேயே பனாமா நகரங்கள் பரபரப்பாக காட்சி அளித்தன.

 காலை வேளையில் பரபரப்பு

காலை வேளையில் பரபரப்பு

உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் அதிர்ந்தன. மருத்துவமனைகளிலும் நோயாளிகளும் உறவினர்களும் அச்சத்துடன் கட்டிடத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை வளாகங்களில் கூடி நிற்கும் காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பனாமாவின் ஆறு மாகாணங்களையும் உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் காலை வேளையில் பரபரப்பு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் வீதிகளிலும் நின்று கொண்டிருந்தனர். உறவினர்களையும் நண்பர்களையும் தெரிந்து கொண்டு நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தனர்.

 6.2 மைல் ஆழத்தில் மையம்

6.2 மைல் ஆழத்தில் மையம்

பனாமாவின் ஹெர்ரேரா, போகஸ் டெல் டோரோ, வெராகுவாஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சுனாமி எச்சரிக்கையால் பீதி

சுனாமி எச்சரிக்கையால் பீதி

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் எதுவும் சேதம் ஆனதாகவோ உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவோ தகவல் எதுவும் இல்லை.

English summary
Buildings and houses were shaken by a powerful earthquake in various places in Panama, one of the African countries. It was recorded as 6.7 on the Richter scale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X