அமெரிக்காவில் நிறவெறி.. மகள் பிறந்தநாளுக்கு முதல்நாள் கருப்பின இளைஞர் படுகொலை.. வெடித்த போராட்டம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கருப்பின இளைஞர் புரூக்ஸை போலீஸார் சுட்டுக் கொன்றதால் அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் நிறவெறி மற்றும் அடக்குமுறை காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏராளமான கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் மின்னபொலிஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாயிடு என்ற கருப்பின இளைஞர் ஒருவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவரது கழுத்தில் முழங்கால் முட்டியை வைத்து அழுத்தியதால் அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த படுகொலைக்கு நியாயம் கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டம்
போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள உத்தரவிடப்படும் என டிரம்ப் எச்சரித்த போதிலும் பிளாய்டுக்காக ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். அங்கிருந்த பழைய கட்டடத்தில் உள்ள பழைய பொருட்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

விசாரணைக்கு
அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா, ஐரோப்பியாவிலும் இந்த போராட்டம் பரவியது. இந்த நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி உணவகத்தின் வெளியே கருப்பின இளைஞர் ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். அவரை நேற்று முன் தினம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

துப்பாக்கிச் சூடு
அப்போது அந்த பகுதிக்கு சென்ற போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ரேஷார்ட் புரூக்ஸ் (27) என தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த அழைத்த போது அவர் வரமறுத்து தப்பியோட முயன்றார் என கூறப்படுகிறது. இதனால் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

போராட்டக்காரர்கள்
இதுகுறித்து வீடியோ வெளியானது. இதை கண்டித்து அந்த நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்து கொளுத்தினர். பின்னர் 45 நிமிடங்ள் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணிநீக்கம் செய்யப்பட்டார். காவல் துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் ராஜினாமா செய்துவிட்டார். படுகொலை செய்யப்பட்ட புரூக்ஸின் இளைய மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications