உக்ரைன் தாக்குதல்.. சும்மா விடமாட்டேன்னு புதின் சொல்லியிருக்கார்! தொலைபேசியில் பேசிய டிரம்ப் பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவின் விமான தளங்கள் மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்திய நிலையில், புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது,உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் திட்டவட்டமாக கூறியதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்து வருகிறது. இதில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

putin-will-hit-back-hard-over-ukraine-drone-strikes-says-trump

ரஷ்யா மீது அடுத்தடுத்து தாக்குதல்

இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும் இரு நாடுகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த நாட்டின் மீது உக்ரைன் மிகப் பெரிய அளவில் டிரோன் தாக்குதலை அண்மையில் நடத்தியது. இதில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. நீருக்கடியில் பாலத்தின் துாண்களின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை இயக்கி, உக்ரைனின் உளவு அமைப்பான, எஸ்.பி.யு. தாக்குதல் நடத்தியது. 1,100 கிலோ கிராம் வெடி பொருட்களை பயன்படுத்தி சாலை மற்றும் ரயில் பாலத்தை குறி வைத்து தாக்கியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் அடுத்தடுத்த இந்த தாக்குதல்கள் ரஷ்யாவை அதிர வைத்துள்ளது.

சும்மா விட மாட்டோம் என பேசினார்

இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேல் விவாதித்துள்ளனர். மே 19ஆம் தேதிக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதினுக்கு இடையே நடந்த இரண்டாவது உரையாடல் ஆகும்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். இதன்பிறகு இந்த உரையாடல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது:- "புதினுடனான உரையாடல் சிறப்பானதாக இருந்தது. ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தையாக இது இல்லை" என்று குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை

மேலும், விமான தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யா மிக வலுவான பதிலடியை கொடுக்கும் என்று புதின் தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறினார். அதில், "விளாடிமிர் புதினுடன் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பேசினேன். ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்தும், இரு தரப்பினரும் நடத்தி வரும் பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஈரான் உடனான அணு ஆயுதப் பேச்சுவார்த்தை குறித்தும் விவாதித்ததாகத் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் விளாடிமிர் புதின் பங்கேற்க விரும்புவதாகவும், இதன் மூலம் விரைவான தீர்வுக்கு உதவ முடியும் என்றும் டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+