சதாம் உசைனை காலி செய்ய பிளான் போட்டு.. காலியான இஸ்ரேலிய வீரர்கள்.. 1992-ல் என்ன நடந்தது தெரியுமா?
வாஷிங்டன்: ஈரான் - இஸ்ரேல் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் "கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும் என நெதன்யாகு கூறியிருந்தார். கமெனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் அதை டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படும் நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டு இஸ்ரேல், வகுத்த ஒரு திட்டமும் அது கடைசியில் தோல்வியில் முடிந்தது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. ஹமாஸ்க்கு ஆதரவாக இருக்கும் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமதான் என்று சொல்லும் அளவுக்கு மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை முன்னெடுத்தது. தெஹ்ரானில் இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன.

1992-ல் நடந்தது என்ன?
இதற்கு எதிராக வரிந்து கட்டிய ஈரான், சமாதானப்பேச்சு எல்லாம் கிடையாது யுத்தம் தொடங்கிவிட்டது எனக் கூறி இஸ்ரேல் மீது சூப்பர்சோனிக் ஏவுகணை எல்லாம் விட்டு தாக்கி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த மோதலுக்கு நடுவே, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்லை இஸ்ரேல் ரகசிய திட்டம் வகுத்ததாகவும், அதனை டிரம்ப் ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமேனி கொல்லப்பட்டல்தால் இந்த மோதல் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் நம்புவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பதற்றத்திற்கு நடுவே, கடந்த 1992 ஆம் ஆண்டு ஈராக் அதிபரை தீர்த்துக்கட்ட இஸ்ரேல் மற்றும் அதன் உளவு அமைப்பான மொசாத் ஒரு திட்டம் வகுத்து கடைசியில் தோல்வியில் முடிந்த நிகழ்ந்த சம்பவம், மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. 1992 ஆம் ஆண்டு இஸ்ரேல் வகுத்த்த திட்டம் என்ன? இஸ்ரேல் இதி சறுக்கலை சந்தித்தது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சதாம் ஹுசைனை படுகொலை செய்ய
1991-ம் ஆண்டு வளைகுடா போருக்குப் பிறகு, சதாம் ஹுசைனை இஸ்ரேல் ஒரு அச்சுறுத்தலாகக் கருதியது. ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை படுகொலை செய்ய இஸ்ரேல் நடத்திய ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியது. "பிராம்பிள் புஷ்",Bramble Bush, என்ற பெயரில் ஆபரேஷனை இதற்காக தொடங்கியது.
இஸ்ரேல் மீது பல ஸ்கட் ஏவுகணை தாக்குதல்களை ஈராக் நடத்தியது. சதாம் உசைன் பேரழிவு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. இந்த அச்சுறுத்தலை நீக்க வேண்டும் என்றால் சதாம் உசைனை காலி செய்ய வேண்டும் என்ற முடிவு செய்த இஸ்ரேலிய இராணுவமும் உளவுத்துறையும் இதற்காக சதாமைக் கொல்ல திட்டம் தீட்டின.
ஆபரேஷன் பிராம்பிள் புஷ்
"ஆபரேஷன் பிராம்பிள் புஷ்" திட்டம் என்ற பெயரில் இதற்கான வியூகம் முன்னெடுக்கப்பட்டது. இஸ்ரேலின் மிகச்சிறந்த கமாண்டோ படையான "சயரெட் மட்கல்" மூலம் இந்த ஆபரேஷன் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. சதாம் ஹுசைனின் சொந்த ஊரான திக்ரித்தில் ஒரு இறுதிச் சடங்கில் அவர் கலந்துகொள்ளும் போது அவரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. மொசாட், இந்த நடவடிக்கைக்கு தேவையான உளவுத் தகவல்களை வழங்கியது. மேலும், ஐ.டி.எஃப்- (இஸ்ரேல் ராணுவம்)உயர் அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.
தவறுதலாக தாக்குதல்
நவம்பர் 5, 1992 அன்று, சயரெட் மட்கல் குழுவினர் வெடிமருந்துகளை பயன்படுத்தி ஒத்திகை ஒன்றை நடத்தினர். அந்த ஒத்திகையின்போது, ஒரு வீரர் தவறுதலாக தனது குழுவின் மீது தாக்குதல் நடத்தினர் . இதில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் "ட்சேலிம் பெட் பேரழிவு" என்று அறியப்பட்டது.
திட்டமிடல், தகவல் தொடர்பு மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனால், வேறு வழியின்றி இரண்டு நாட்களுக்குப் பிறகு, "ஆபரேஷன் பிராம்பிள் புஷ்" அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேலிய கமாண்டோக்களின் மரணம் பல ஆண்டுகளாக வெளிப்படுத்தாமல் ரகசியாமக வைக்கப்பட்டு இருந்தது.
பெஞ்சமின் நெதன்யாகு பேச்சு
இந்த நிகழ்வு நடைபெற்று கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஒரு நாட்டின் தலைவரை குறிவைத்துள்ளது. ஆனால், இந்த முறை தாக்குதல் பாக்தாத்தில் அல்ல, டெஹ்ரானில் குறிவைத்து இருக்கிறது. இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில், இஸ்ரேலியப் படைகள் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளன. நாதன்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் அரக் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
"பிராம்பிள் புஷ்" நடவடிக்கையைப் போல இது ஒரு இரகசிய நடவடிக்கை அல்ல. இது ஒரு பகிரங்க ராணுவ நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், " ஈரான் ஆட்சி ஒரு "நிலையான அச்சுறுத்தல்" என்று கூறியுள்ளார்.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications