Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஈரான் மீதான தாக்குதலை தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தனிப்பட்ட முறையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வலியுறுத்தியதாக அமெரிக்க நாளிதழ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவே இறங்கி போனாலும் சவுதி இந்த விவகாரத்தில் ஈரானை தாக்க வேண்டும் என்று கூறுவது ஏன்? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறி வந்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்கியது.

Saudi Crown Prince Pushes Trump for Iran Regime Change Amid War

ஈரானை விடாதீங்க

துபாய், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதும் குண்டு மழை பொழிந்தது. ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக போர் நீடித்து வருகிறது.

இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து நேற்று பேசிய டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லியிருப்பதாகவும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் எனக்கூறியுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் நீடித்து மத்திய கிழக்கில் பதற்றம் தணியுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தொடர வேண்டும் என்று அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், ஈரானின் கடுமையான ஆட்சிக்கு முடிவு கட்ட தீர்க்கமான மற்றும் நீடித்த நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளார். வளைகுடா பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு நீடித்த அச்சுறுத்தலாக ஈரான் உள்ளது. அதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஆட்சி மாற்றம் மூலமே அந்த அச்சுறுத்தலை முற்றிலும் நீக்க முடியும் என முகம்மது பின் சல்மான் நம்புகிறாராம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதே கருத்தையே முன்வைத்து வருகிறார். அதே நேரத்தில் பலவீனமான அல்லது நிலையற்ற தன்மை கொண்ட ஈரானை இஸ்ரேல் சகித்து கொண்டாலும், சவுதி அரேபியா இதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாம். ஏனெனில், ஈரானில் நிலையற்ற தன்மை இருந்தால், அது பிராந்தியத்தில் குழப்பம் மற்றும் பயங்கரவாத செயல்களை அதிகரித்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சவுதி அஞ்சுகிறதாம்.

தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்

தனிப்பட்ட முறையில் முகம்மது பின் சல்மான், அமெரிக்க அதிபரை தொடர்பு கொண்டு போரை தொடருமாறு வலியுறுத்தினாலும், பொதுவெளியில் சமநிலையான நிலைப்பாட்டுடன் இருப்பதாக சவுதி அரேபியா காட்டிக்கொள்கிறது. சவுதி அரேபியா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஈரான் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண வேண்டும். பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதோடு, அங்கு நீடித்து வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியிருந்தது.

ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதலில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் ஏற்கனவே, பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியிலும் நிலமை மோசமாக உள்ளது. ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடக்க முடியாமல் நடுவழியில் நிற்கின்றன. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய உயிர் நாடியாக உள்ள இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மோதலை தீவிரப்படுத்தும்

இந்த சூழலில்தான் முகம்மது பின் சல்மான், ஈரான் மீது இன்னும் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்துமாறும் ஈரான் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தரை வழி தாக்குதலை முன்னெடுக்கவும் வலியுறுத்துவதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. கார்க் தீவை கைப்பற்றுவதை குறித்த திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது மோதலை மிகப் பெரிய அளவில் தீவிரப்படுத்தும் ஒரு கட்டமாக அமையும்.

ஏனெனில், கார்க் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90% வரை நடைபெறும் முக்கிய மையமாக இருப்பதால், அதை கைப்பற்றுவது ஈரானின் பொருளாதாரத்திற்கு நேரடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் போரின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும். ஈரான் விவகாரத்தில் சவுதி பட்டத்து இளவரசரின் நிலைப்பாடு பற்றிய தகவல், மற்றும் சவுதி அதிகாரிகளின் மறுப்பு ஆகியவற்றால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+