அமெரிக்காவில் இந்திய மாணவிக்கு கோர மரணம்..கேலியாக சிரித்த கொடூர போலீஸ்! பாய்ந்தது அதிரடி நடவடிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியை காரை ஏற்றி கொலை செய்ததாக காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அதிவேகமாக கார் மோதியதில் 100 அடி தூரத்திற்கும் மேல் மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த போலீஸ் அதிகாரி கேலியாக சிரித்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம் பெண்ணான ஜான்வி கண்டுலா உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் அருகே சியாட்டில் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் ஜான்வி உயிரிழந்தார். இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனம் மோதி ஜான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக அந்த கார் ஜான்வி மீது மோதியதாகவும் அதில் 100 அடி உயரத்திற்கு அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காரை ஓட்டியது கெவின்டே என்ற காவல் அதிகாரி என்பதும் அவருடன் டானியல் என்ற காவல் அதிகாரி பயணித்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் டேனியல் தனது உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை நான் இடித்து விட்டேன் பல மீட்டர் தூரம் பறந்து சென்று அவர் விழுந்து விட்டார் என சிரித்தபடியே தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில் அவரது யூனிஃபார்மில் பொருத்தப்பட்டிருந்த கேமரா இந்த காட்சிகளை படம் பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த எதிர்ப்பை சந்தித்தது.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் குதித்தனார். மேலும் மாணவி உயிரிழந்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பிகளும் அரசை வலியுறுத்தினர். இந்த நிலையில் மாணவியின் சாவு குறித்து கேலியாக சிரித்து பேசிய டேனியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கெவின்டேவை பணி நீக்கம் செய்து சியாட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் காவல்துறை எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆனாலும் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications