"ஜெய்ஹிந்த், ஹெய் பாரத்.." சீறி பாய்ந்த டிராகன்.. அடுத்த நிமிடம் சுபன்ஷு சுக்லா சொன்ன வார்த்தைகள்!
வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்டோரைக் கொண்ட குழு இன்று அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்குப் புறப்பட்டது. இதற்கிடையே ராக்கெட் விண்வெளிக்குப் பாய்ந்த உடனேயே சுபன்ஷு சுக்லா முதலில் என்ன சொன்னார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசாவுடன் கூட்டு முயற்சியில் ஆக்சியம் மிஷன் 4 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மிஷனில் தான் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் வானிலை, தொழில்நுட்ப கோளாறு எனப் பல காரணங்களால் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்துள்ளது. இப்போது ஒருவழியாகத் தடைகளைத் தகர்த்து சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சரியாகப் பிற்பகல் 12.01 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதே மையத்தில் இருந்துதான் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969ல் நிலவுக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ராக்கெட் விண்ணில் பாய்ந்தவுடன் சுபன்ஷு சுக்லா முதலில் என்ன கூறினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்கெட் வெற்றிகரமாகப் பாய்ந்த அடுத்த நிமிடம் அவர் இந்தியில் கமால் கி ரைட் (Kamaal ki ride) என்று கூறியிருக்கிறார். அதாவது இதற்கு இந்தியில் என்ன ஒரு சூப்பர் பயணம் என அர்த்தம். மேலும் அவர் ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பாரத் என்றும் முழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது..
சுபன்ஷு சுக்லா மேலும், "என்ன ஒரு பயணம்! என் தோள்களில் பொறிக்கப்பட்டு இருக்கும் மூவர்ண சின்னம், நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்பதையே சொல்கிறது" என்றே கூறியிருக்கிறார். ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்குச் சென்றபோது, குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளியில் இருந்து பேசிய முதல் வார்த்தைகள் இவை.
சுமார் 28 மணி நேர சுக்லா விண்வெளியில் பயணிக்க உள்ளார். சரியாக நாளை மாலை 4.30 மணிக்கு அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார்கள். இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் நாசா இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications