அலட்சியப்படுத்திய ட்ரம்ப்.. அமெரிக்கா செய்த அந்த ஒரு தவறு.. இப்போ பாருங்க ஈரான் கூட அடிக்குது!
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா செய்த ஒரு சிறு தவறு இப்போது ரொம்பவே காஸ்ட்லியாக மாறியிருக்கிறது. அமெரிக்கா அப்படி என்ன செய்தது.. இப்போது என்ன சிக்கலை எதிர்கொள்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் உடனான போர் சில வாரங்களாகவே தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா செய்த ஒரு மிக முக்கிய தவறு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மோதல் தொடங்க சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா இந்த தவறை செய்திருந்தது. அந்த ஒரு சிறு தவறால் தான் அமெரிக்காவுக்கு இப்போது பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஷாஹெட் ட்ரோன்கள்
இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு மட்டுமின்றி, உயிரிழப்புகளையும் அமெரிக்கா எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது ஈரான் ராணுவத்திடம் உள்ள ஷாஹெட் ட்ரோன்கள் ரொம்பவே ஆபத்தானது. அதை எதிர்த்து காலி செய்யும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இல்லை. ஆனால், இது உக்ரைன் வசம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவுக்குத் தருவதாக உக்ரைன் தானாக முன்வந்து சொன்னது. இருப்பினும், இதை டிரம்ப் நிர்வாகம் நிராகரித்தது. இதைத் தான் மிகப் பெரிய பிழை என்கிறார்கள் அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள்!
ஆபத்து
ஈரான் நாட்டின் இந்த ஷெஹெட் ட்ரோன் என்பது வழக்கமான டிரோன் இல்லை. அது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இருந்து தப்பிக்க எப்போதும் தாழ்வாகப் பறக்கும். மேலும், இதன் ரேட் கூட $20,000-$50,000 டாலர் மட்டுமே.! ஆனால், இதைத் தடுத்து காலி செய்ய அமெரிக்கா மிகப் பெரிய தொகையைச் செலவிட வேண்டி இருக்கிறது. இந்த டிரோன் தாக்குதலால் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த டைப் டிரோன்களை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
அமெரிக்கா மட்டும் இந்த டிரோன்களை காலி செய்யும் தொழில்நுட்பத்தை உக்ரைன் கொடுக்கும்போதே வாங்கியிருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டு இருக்காது. ஈரானின் ஷாஹெட் டிரோன்கள் எப்படிச் செயல்படும்.. அதைத் தாக்கி அழிப்பது எப்படி.. தனது டிரோன்கள் எப்படிச் செயல்படும் என்பதை விளக்கும் வகையில் உக்ரைன் ஒரு விரிவான பிபிடியையும் கூட அமெரிக்காவிடம் சமர்ப்பித்தது. அதை நிகாரித்ததே அமெரிக்காவுக்குப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
பாதுகாப்பு சிஸ்டம்
மார்ச் 1ம் தேதி குவைத்தில் உள்ள ஒரு அமெரிக்க கமாண்ட் சென்டர் மீது நடந்த தாக்குதலில் மட்டும் ஆறு வீரர்கள் பலியாகினர். தாழ்வாகவும் மெதுவாகவும் பறக்கும் இந்த ட்ரோன்கள், வேகமான அச்சுறுத்தல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு சிஸ்டத்தை ஈஸியாக ஏமாற்றிவிடுகிறது. மேலும், முன்பே குறிப்பிட்டது போல இந்த டிரோன்களின் ரேட் வெறும் சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே. ஆனால், ஒரு ட்ரோனை இடைமறிக்க அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது.
இந்த ட்ரோன்கள் எதிர்பார்த்ததை விடப் பெரிய சவாலை ஏற்படுத்துகின்றன என்பதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸ்ஸெத் மற்றும் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.
என்ன நடந்தது!
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தத் தொழில்நுட்பம் குறித்து நேரடியாக விளக்கினார். துருக்கி, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் ட்ரோன் போர் மையங்கள் அமைக்கவும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூட்டு உற்பத்தியையும் அவர் முன்வைத்தார்.
அமெரிக்காவுக்கே இந்த தொழில்நுட்பம் இல்லை என்றால் உக்ரைனுக்கு எப்படி இது கிடைத்திருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. ரஷ்யா போரில் உக்ரைனுக்கு எதிராக இந்த வகை டிரோன்களையும் உக்ரைன் எதிர்கொண்டது. இதன் காரணமாகவே குறிப்பிட்ட இந்த வகை ட்ரோன்களை சமாளிக்கும் தொழில்நுட்பத்தை உக்ரைன் உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் 2 கோடி டிரோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இது டிரோன் துறையிலும் அமெரிக்காவுக்கு மிக முக்கிய பூஸ்ட்டாக அமையும்.
மிக பெரிய தப்பு
ஜெலன்ஸ்கியின் முன்மொழிவைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆராயுமாறு டிரம்ப் தனது குழுவை அறிவுறுத்தினார், ஆனால் அதைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவின் இந்த தவறு இப்போது மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனைகளையும் இழப்புகளையும் கொடுத்து வருகிறது. இப்போது வேறு வழியில்லாமல் இந்த டிரோன்களை சமாளிக்க உக்ரைன் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
மேலும், ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே உக்ரைனின் ஆஃபரை நிராகரித்தது மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஈரானின் பெரும்பாலான டிரோன்கள் இடைமறிக்கப்பட்டாலும், உயிரிழப்புகள் கணிசமாகவே இருக்கிறது. மேலும், அந்த மலிவு விலை டிரோன்களை சமாளிப்பதும் காஸ்டிலியாக மாறியுள்ளது.
-
அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்? -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி -
பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்! ஈரான் கை ஓங்குது! -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு? -
இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை -
மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications