உஷ்.. உஷ்.. அங்க என்ன நெளியுது.. நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் அலறல்.. பதற்றம்! ஒரே பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தில் அழையா விருந்தாளியாக வந்த பாம்பை பார்த்து பயணிகள் பதற்றமடைந்து அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான ஊழியர்களின் சாதுர்ய செயல்பட்டால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் 2038 எனும் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்தனர்.
விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இறங்க தயாரானது.

விமானத்தில் பாம்பு
இதையடுத்து பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க தயாரானார்கள். இந்த வேளையில் பயணிகள் இறங்கும் வாயில் அருகே ஏதோ ஒன்று நெளிவதை சில பயணிகள் பார்த்தனர். உற்று கவனித்தபோது பாம்பு என்பது தெரியவந்தது. இதை பார்த்த பயணிகள் ‛‛பாம்பு.. பாம்பு'' என்று அலறி கூச்சலிட்டனர்.

பாம்பை பிடித்த ஊழியர்கள்
இதையடுத்து விமான பணியாளர்கள் அவர்களிடம் பேசினர். விமானத்தில் பாம்பு இருப்பது பற்றி தரையிறங்கும் நியூஜெர்சி நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் அங்கு தரையிறங்கிய போது வந்த தொழிலாளர்கள் விமானத்தில் இருந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். மேலும் விமானத்தில் பல இங்களில் ஊழியர்கள் தேடினர். வேறு எங்கும் பாம்புகள் இல்லாதது தெரியவந்தது.

விஷமில்லாத பாம்பு
இதையடுத்து பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி சென்றனர். இதுபற்றி நியூயார்க் -நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛விமான நிலைய வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் 'யுனைடெட் ப்ளைட் 2038'ல் இருந்த கார்டர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். கார்டர் வகை பாம்பான இதற்கு விஷம் கிடையாது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை'' என கூறப்பட்டுள்ளது.

முதல் முறையல்ல
விமானத்தில் பாம்புகள் சிக்குவது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2016ல் மெக்சிகோ சிட்டிக்கு சென்ற ஏரோமெக்சிகோ விமானம் சென்றது. அப்போது விமானத்தில் பாம்பு இருந்தது. அதன்பிறகு 2013ல் ஆஸ்திரேலியாவின் ப்பபுவா நியூ சென்ற விமானத்தில் இறக்கை பகுதியில் மலைப்பாம்பு இருந்தது. அதன்பிறகு தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications