அமெரிக்க அதிபர் டிரம்ப் சிகிச்சை பெறும் ராணுவ மருத்துவமனை அருகே மர்ம பையால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அருகே மர்ம பை ஒன்று கிடந்ததால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பையை அப்புறப்படுத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

டிரம்பிற்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவர் வாஷிங்டன்னில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராணுவ மருத்துவமனை

ராணுவ மருத்துவமனை

டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் ராணுவ மருத்துவமனை அருகே ஒரு மர்ம பை இருந்தது.

மர்ம பை

மர்ம பை

அந்த பையை நீண்ட நேரமாக யாரும் எடுக்கவரவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு வரும் சாலையை போலீஸார் உடனடியாக மூடிவிட்டனர். இதையடுத்து மர்ம பை அருகே யாரும் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. கையுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பையை சோதனை செய்த அதிகாரிகள்

பையை சோதனை செய்த அதிகாரிகள்

வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த பையை சோதனை செய்தனர். பின்னர் அந்த பையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் என்ன இருந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சாலை திறப்பு

சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த பை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் வெடிக்கும் அளவுக்கு எந்த பொருளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மூடப்பட்ட சாலைகள் திறக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+