‛‛கோலாகலம்’’.. அமெரிக்காவில் தமிழ் குடும்பங்கள் கூடி கொண்டாடிய தீபாவளி.. பாரம்பரிய உடையில் அசத்தல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இசை நிகழ்ச்சியுடன் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உணவுகள், இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தியாவை போல் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இந்தியர்கள் அனைவரும் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்தாடை அணிந்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்காவை பொறுத்தமட்டில் சுமார் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்களாக உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாட தவறுவது இல்லை. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா உள்பட பல இடங்களில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதியில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடப்படும். வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது இந்த ஆண்டும் நடந்தது.

வெள்ளை மாளிகை கொண்டாட்டம்
மேலும் அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது. அதிபர் ஜோபைடன், மனைவி ஜில்பைடன் தீபாவளி கொண்டாடி இந்தியர்களுக்கு விருந்து வழங்கினர். அதேபால் துணை அதிபர் கமலா ஹாரீசும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாடினர். மேலும் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15ம் தேதி முதல் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்றது.

தமிழ் குடும்பத்தினர் கொண்டாட்டம்
இவ்வாறு தொடர்ச்சியாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் மான்டேகா கலிபோர்னியாவில் வசித்து வரும் தமிழர்கள் சார்பில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. 150க்கும் அதிகமான தமிழர்கள் நண்பர்களாக ஒன்றுக்கூடி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்
விழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. வயலின், பியானோ வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் நடனமாடினர். அதோடு வீட்டில் அனைவரும் விதவிதமாக உணவுகள், இனிப்புகள் தயாரித்து கொண்டு வந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒற்றுமையை உணர்த்தும் வகையில் தீபாவளியை கொண்டாடினர். இந்த கொண்டாட்டம் 6 மணிநேரம் வரை சிறப்பாக நடந்தது.

தமிழ் பாரம்பரிய உடை
இந்த விழாவில் அனைவருரம் பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்க தமிழ் பாரம்பரியம், கலாசாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்தாலும் கூட தமிழ், இந்திய பாரம்பரியத்தை மறக்காமல் பின்பற்றும் வகையில் இந்த தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications