எலான் மஸ்க் வீட்டில் குவா குவா.. மகளின் பேரை கூட இப்படியா வைப்பார்.. ட்விட்டர் சென்சேசனல் ட்ரெண்ட்
வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் இசைக்கலைஞரான அவருடைய மனைவி கிரீம்ஸுக்கும் டிசம்பர் மாதத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இதுவரை தம்பதியினர் தகவலை வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தையின் பெயர் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பலமுறை தோல்வி கண்டாலும் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையில் எலான் மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் பல செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவத் தயாராக உள்ளது.

எலான் மஸ்க் குழந்தை
டெக்னாலஜியில் எப்படியோ அதேபோல் தான் ட்விட்டரிலும் எலான் மஸ்க் மிகவும் ஆக்டிவ். உலகம் பிரபலங்கள் முதல் நம்ம ஊர் உள்ளூர் பிரபலங்கள் வரை யார் கேட்டாலும் பதில் அளிக்கக்கூடியவர். இந்நிலையில் எலான் மஸ்க் மற்றும் இசைக்கலைஞரான அவருடைய மனைவி கிரீம்ஸுக்கும் சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையின் பெயர் தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தகவலை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்துள்ளனர்.

பெண் குழந்தை
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தங்களுக்கு குழந்தை பிறந்த தகவலை கூறியுள்ளார் க்ரீம்ஸ். 33 வயதான எலான் மஸ்க்கின் மனைவி கிரீம்ஸ் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்கும்போது, தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்ற தகவலை தற்செயலாக கூறினார். கிரீம்சை பேட்டி எடுக்கும்போது அவரின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் மிகவும் பதட்டமான கிரீம்ஸிடம் அதைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, அது அவர்களின் இரண்டாவது குழந்தை என்று அவர் உறுதி செய்தார்.

பெயர் காரணம்
ஏற்கனவே கர்ப்பமாக இருந்தபோது காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக , வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டனர் என்றும் கிரீம்ஸ் தெரிவித்தார். குழந்தையின் பெயரையும் அவர் கூறிய நிலையில் எலான் மஸ்க்கின் மகள் பெயர் தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. பெயருக்கு காரணம் கேட்டு பலரும் கேள்விக் கணைகளை துளைத்து வருகின்றனர். அப்படி என்ன தான் தனது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளா எலான் மஸ்க் என கேட்கலாம். இந்த அளவுக்கு ட்விட்டரில் வைரலாகும் எலான் மஸ்க்கின் மகளின் பெயர் "எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க்" (Exa Dark Sideræl Musk) இந்த பெயர் வைப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கிரீம்ஸ் கூறியுள்ளார்.

ட்விட்டரில் வைரல்
"எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க்" பெயரில் ஸ்பேஸ் & டெக்னாலஜி சம்மந்தப்பட்ட பல விதமான அர்த்தங்கள் உள்ளன. ஆனால் தனது மகளை "ஒய்" ( Y) என அழைப்பதாக கூறியுள்ளார். எக்ஸா என்பது எக்ஸாஃப்ளோப்ஸ் என்ற சூப்பர் கம்ப்யூட்டிங் சொல்லைக் குறிக்கிறது. டார்க் என்பது தெரியாதவர்களுக்கானது, பிரபஞ்சத்தின் "அழகான மர்மம்" என்றும், சைடெரல் என்பது "பிரபஞ்சத்தின் உண்மையான நேரம், நட்சத்திர நேரம், ஆழமான விண்வெளி நேரம்" என்பதாகும் என கிரீம்ஸ் மேலும் கூறியுள்ளார். ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் தலைசிறந்த படைப்பான 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்'லிருந்து க்ரிம்ஸின் விருப்பமான கதாபாத்திரமான கேலட்ரியலையும் குழந்தையின் பெயரில் சைடெரெல் என வைத்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications