நட்சத்திரங்களின் வெடிப்பால் கதிர் வீச்சு..பூமிக்கு பேராபத்து வரலாம்..விஞ்ஞானிகள் கொடுத்த பகீர் தகவல்
வாஷிங்டன்: பிளாஸ் வேவ் என்று சொல்லப்படும் வெடித்த நட்சத்திரங்களில் ஏற்படும் அலைகள் பெரிய அளவிலான எக்ஸ் கதிர்களை உருவாக்கும். இந்த கதிர்கள் பூமி உள்பட பிற கிரகங்களை மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ வந்தடையலாம். இது கிரகங்களுக்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கற்பனைக்கும் எட்டாத பல பேரதிசயங்களை கொண்டது பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் மொத்த அளவில் 96 சதவிகிதத்தை கரும் பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் தான் நிறைந்துள்ளன. சூரியன், பூமி, விண்மீன்கள் மற்றும் பால்வெளி ஆகியவை இணைந்து மீதமுள்ள 4 சதவிகிதத்தை நிரப்புகின்றன என்று அறிவியல் கோட்பாடு சொல்கிறது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் இருந்து சுமார் 15 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள சூரிய ஒளி, பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது. பால்வெளி மண்டலத்தில் பல லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளி பல கோடி ஆண்டுகளாக அண்ட வெளியில் பயணிக்கும். நட்சத்திரம் அழிந்துவிட்டாலும் கூட அதன் ஒளி பயணிக்கும்.
அதாவது இன்று நம் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரங்கள் கூட பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தவையாக கூட இருக்கலாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க... நமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள இடங்களில் அதாவது விண்வெளியின் மிக ஆழமான இடத்தில் இருந்து பூமிக்கு ஒரு அச்சுறுத்தல் வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு: -
நாசா கடந்த 1999 ஆம் அண்டு அனுப்பிய சந்திரா எக்ஸ்ரே கண்கணிப்பகம் மற்றும் பிற டெல்ஸ்கோப்ஸ்களை கொண்டு விஞ்ஞானிக்ள் ஆய்வு செய்ததில், நட்சத்திரங்களின் வெடிப்பு மூலம் ஏற்படும் எக்ஸ் கதிர்கள் 100 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகங்களை பாதிக்கக் கூடிய ஒரு கட்டம் (phase) வரலாம் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த கிரங்களில் பூமியும் ஒன்று என்பது கவனிக்கக் கூடியது.
வெடித்த நட்சத்திரங்கள் முன்பை விட அதிக ஆபத்துக்களை கிரகங்களுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது ஆய்வு. பிளாஸ் வேவ் என்று சொல்லப்படும் வெடித்த நட்சத்திரங்களில் ஏற்படும் அலைகள் பெரிய அளவிலான எக்ஸ் கதிர்களை உருவாக்கும். இந்த கதிர்கள் பூமி உள்பட பிற கிரகங்களை மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ வந்தடையலாம். வெடிப்புக்கு பிறகு பல தசாப்தங்களுக்கு இது நீடிக்கலாம். இத்தகைய தீவிர வெளிப்பாடு கிரகங்களுக்கு அழிவை ஏற்படுத்தலாம்" என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும், அருகில் உள்ள கிரகங்களை இந்த எக்ஸ் கிரகங்களில் பெரிய அளவில் வீசினால் அதன் ரேடியேஷன்கள் கிரகங்களின் வளிமண்டல வேதியியல் சூழலை கடுமையாக பாதிக்கும். பூமி போன்ற கிரகங்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் ஓசோன் படலங்களை பெருமளவு அழித்து விடும். இதனால் புற ஊதாக் கதிர்களினால் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் இயன் புருண்டன் இந்த ஆய்வை மேற்கொண்டு மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில், இதுபோன்ற நிகழ்வுகளால் பூமிக்கு தற்போது பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கதிர் வீச்சு ஆபத்து மண்டலத்திற்குள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூப்பர்நோவா எதுவும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications