கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுறாங்கலாம்.. எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ நிபுணர்
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு அமெரிக்காவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் அங்கு குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் விகிதம் அதிகரித்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்து உச்சபட்ச பாதிப்பை ஏற்படுத்தியது. அரசியல், பொருளாதாரம், சுகாதார கட்டமைப்புகளை அசைத்துப் பார்த்த கொரோனா ஓமிக்ரான் எனும் திரிபாக மாறி அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தடுப்பூசியோடு பூஸ்டர் செலுத்தியவர்களுக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக அந்நாட்டில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்படும் குழந்தைகள்
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது, ஜனவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 100,000 க்கும் மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தில் குறைவாக இருந்தது என்று அமெரிக்க சுகாதாரதுறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன

மிக அதிக குழந்தைகள் பாதிப்பு
டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48 சதவீதமாக இருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தை எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு, தடுப்பூசி இன்னும் பெறாதவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றால் அவர்களை தடுப்பூசி போடப்பட்ட நபர்களாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது என மருத்துவ நிபுணர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி கூறியுள்ளார். CDC மற்றும் அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தரவுகளின்படி, கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளது எனவும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 797 குழந்தைகள் என்ற இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச அளவுஎண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி அவசியம்
அமெரிக்காவில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி அவர்களுக்கு தடுப்பூசி போடுவது உடன்பிறந்தவர்கள் மற்றும் ஆர்வத்துடன் தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர்களை கொண்டிருப்பதும் தான் என கூறும் வாலென்ஸ்கி, சமீபத்திய தகவல்களின்படி கொரோனா தொற்று நோயின் காரணமாக தற்போது 82 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது கடந்த ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை எனவும் கூறினார்.
Recommended Video

புதிய பரிந்துரைகள்
பள்ளிகளில் புதிய கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் இல்லாத அல்லது மிகக் குறைந்த அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இருபத்தி நான்கு மணி நேரம் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் ஐந்து நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்தப் படலாம் என கூறப்பட்டுள்ளது.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications