வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 130,818 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 1,305 பேர் அங்கு கொரோனாவின் கோராத்தாண்டவத்தால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,59,76,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் இதுவரை 6,85,93,307 பேர் மீண்டனர், எனினும் உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 20,48,328 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 25,334,542 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

ஒரு நிமிடத்தில் 140 பேருக்கு கொரோனா தடுப்பூசி... அதிரடி காட்டும் பிரிட்டன் அரசுஒரு நிமிடத்தில் 140 பேருக்கு கொரோனா தடுப்பூசி... அதிரடி காட்டும் பிரிட்டன் அரசு

உலகிலேயே அதிகம்

உலகிலேயே அதிகம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,46,15,172 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,05,82,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி

ஜெர்மனி

அண்மைக்காலமாக மோசமான பாதிப்பை கொரோனாவால் சந்தித்து வரும் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 130,818 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 1,305 பேர் பலியாகினர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் ஒரே நாளில் 665 பேர் மரணம் அடைந்தனர்.

ஐரோப்பா நாடுகள்

ஐரோப்பா நாடுகள்

இங்கிலாந்தில் 599 பேரும், ரஷ்யாவில் 471 பேரும், மெக்ஸிகோவில் 463 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 37535 பேரும், ஸ்பெயினில் ஒரே நாளில் 33800 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 24139 பேரும், ரஷ்யாவில் ஒரே நாளில் 22857 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரிழப்பு

பேரிழப்பு

இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை பரிசோதித்து வரும் நிலையில் உயிரிழப்புகள் குறைவாக உள்ளதற்கு இது முக்கிய காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

English summary
Corona exposure is severe in the United States and European countries. A maximum of 130,818 coronas were confirmed in the United States in just one day yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X