‛‛பகையை மறந்த அமெரிக்கா.’’. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல்
வாஷிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேருக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபராக இருந்தவர் இப்ராஹிம் ரைசி (வயது 63). இவர் நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிரப் டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும், இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் ஈரான் திரும்பினார். ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 9 பேர் பயணித்தனர்.
இந்த ஹெலிகாப்டர் நெக்ரானில் இருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டிய வாசகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது மோசமான காலநிலை நிலவியது. கடும் பனி மூட்டம், கனமழையால் காலநிலைக்கு நடுவே ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் ஹெலிகாப்டர் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியது. அதாவது தொலை தொடர்பு மட்டும் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
ட்ரோன் மூலம் தேடியபோது தான் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இடத்துக்கு மீட்பு படையினர் சென்று உடல்களை மீட்டனர். அப்போது தான் ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிரப் டோலாஹியன் உள்பட 9 பேரும் உடல் கருகி மரணமடைந்தது தெரியவந்தது. உடல்கள் தீப்பற்றி எரிந்து இருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கும், ஈரான் அதிபர் இப்ராஹிம் காசிக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. காசா மீதான போர் நடவடிக்கையை கைவிடாவிட்டால் இஸ்ரேல் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்து இருந்தார். மேலும் இருநாடுகள் இடையே குண்டு வீச்சு மற்றும் டிரோன் தாக்குதல் நடந்தது. இந்நிலையில் தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் காசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார். இது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தான் ஈரானின் இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது மொக்பர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் காலமான இப்ராஹிம் காசிக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை தொடர்ந்து அந்த வரிசையில் அமெரிக்காவும் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இத்தகைய சூழலில் ஈரான் அதிபர் இப்ராஹிம் காசிக்க அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
"வடமேற்கு ஈரானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் அவர்களது தூதுக்குழு உறுப்பினர்களின் மரணத்திற்கு அமெரிக்கா தனது உத்தியோகபூர்வ இரங்கலை தெரிவிக்கிறது. ஈரான் ஒரு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் போது, ஈரானிய மக்களுக்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்துக்கான அவர்களின் போராட்டத்திற்கும் எங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications