Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மீண்டும் மிரட்டும் காலரா'.. உலக அளவில் பாதிப்பு அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு 'பகீர்'!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: காலரா நோய் பல ஆண்டுகளாக சரிந்தே வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியிருப்பது கவலை அடைய செய்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் 26 நாடுகளில் காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2017 முதல் 2021- ஆம் ஆண்டு வரை 20க்கும் குறைவான நாடுகளில் மட்டுமே காலரா நோய் பாதிப்பு இருந்து வந்தது.

இந்த சூழலில் நடப்பு ஆண்டில் காலரா பாதிப்பு அதிகரித்து இருப்பது கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்று மடங்கு அதிகமாக பரவல்

மூன்று மடங்கு அதிகமாக பரவல்

ஜெனீவாவில் இன்று உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றுநோய் வயிற்றுப்போக்கு நோய்கள் தொடர்பான குழுவில் இடம் பெற்றுள்ள பிலிப்பே பர்போசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காலரா பாதிப்பு அதிகரிக்க மட்டும் செய்யவில்லை. இந்த பாதிப்பு பெரிய அளவிலும் ஆபத்தானதாகவும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டு காலரா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

இன்னும் மோசமடையும்

இன்னும் மோசமடையும்

வறுமை மற்றும் சண்டைகள் உள்ளிட்ட காரணங்களோடு பருவநிலை மாற்றங்களாலும் காலரா பரவல் அதிகரித்துள்ளது. தீவிர பருவநிலை மாறுபாடுகளான வெள்ளம், புயல் மற்றும் வறட்சி, தூய்மையான குடிநீருக்கான தட்டுப்பாடு போன்றவை காலராவுக்கான உகந்த சூழலாக மாறியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரம் அடைவதால், காலரா பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த சூழல் இன்னும் மோசம் அடையும்'' என்று கூறினார்.

தடுப்பூசிகள் இல்லை

தடுப்பூசிகள் இல்லை

மேலும் அவர் கூறுகையில், ''தேவையை ஒப்பிடும் போது காலராவுக்கான தடுப்பூசிகள் குறைந்த அளவிலே உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தக்கூடிய வகையில் சில மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. காலரா பாதிப்புக்கும் தடுப்பூசி பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும் போதிய அளவிலான தடுப்பூசிகள் இல்லை. காலரா தடுப்பூசிகளை ஒரே ஒரு நிறுவனம் உற்பத்தி செய்வதுதான் பிரச்சினை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே அதிக நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரிப்பதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

சிகிச்சைகள் கிடைப்பதில்லை

சிகிச்சைகள் கிடைப்பதில்லை

சில மணி நேரங்களில் காலரா உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றாலும், வாய்வழி மறுநீரேற்றம் என்று சொல்லப்படும் oral rehydration என்ற எளிய சிகிச்சை மூலம் இதை குணப்படுத்த முடியும். தீவிரமான பாதிப்புகளுக்கு ஆண்டிபயாடிக்கள் போதும். ஆனால், பலருக்கு சரியான நேரத்தில் இந்த சிகிச்சைகள் கிடைப்பதில்லை. சுத்தமான குடிநீர் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயை தடுக்க முடியும்'' என்றார்.

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி

காலரா நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் உலக சுகாதார அமைப்பிடம் இல்லை. ஏனென்றால், இந்த விவரங்களை பாதிக்கப்பட்ட்ட நாடுகள் அளிப்பது இல்லை. விபிரியோ காலரே என்ற பாக்டிரியாவினால் காலரா நோய் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் காலரா பரவும். காலரா நோய் பாதிப்பின் முதல் அறிகுறி என்னவென்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவது ஆகும்.

உடல் வறண்டு போகும்

உடல் வறண்டு போகும்

அதிகப்படியான நீர் உடலில் இருந்து வெளியேறுவதால் உடல் வறண்டு போகும். உதடு, கை, கால்கள் வறண்டு சுருக்கம் ஏற்படும். சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும். அசுத்தமான நீர் மற்றும் உணவால் காலரா பரவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+