5ம் வகுப்பு மாணவருடன் உடலுறவு! பள்ளியிலேயே மாணவரிடம் அத்துமீறிய ஆசிரியை.. பதற வைக்கும் சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை ஒருவர் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவருடன் தகாத உறவைக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
ஆசிரியர்கள் தான் எப்போதும் மாணவர்கள் செய்யும் தவறை கண்டித்து அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். ஆனால், இங்கு ஆசிரியை ஒருவரே மாணவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துமீறிய ஆசிரியை: அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை மேடிசன் பெர்க்மேன்.. இவர் வேலை செய்து வந்த பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு மாணவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த ஆசிரியைக்குத் திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த 11 வயது சிறுவனும் மேடிசனும் தொலைப்பேசியில் ஆபாசமாகப் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் தாயார் மொபைலை பிடுங்கிப் பார்த்ததில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அந்த சிறுவனுக்கும் ஆசிரியைக்கும் நடந்த மெசேஜ் உரையாடல்களைப் பார்த்ததும் அந்த சிறுவனின் பெற்றோருக்குத் தலையே சுற்றிவிட்டதாம். இருவருக்கும் இடையே அந்தளவுக்கு ஆபாச மெசேஜ்கள் இருந்துள்ளது.
"கணவர் வேண்டாம்.. மாமியார் தான் வேண்டும்.. அவங்க கூட தான் வாழ்வேன்.." அடம்பிடிக்கும் இந்திய இளம்பெண்
புகார்: இதையடுத்து அவற்றை எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று இது குறித்துக் கேட்டுள்ளனர். மேலும், போலீஸ் நிலையத்திலும் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மதிய உணவின் போது அல்லது பள்ளி முடிந்த பிறகு அந்த 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்தது குறித்து அந்த மெசேஜ்கள் இருந்துள்ளன. மேலும், பல ஆபாச கருத்துகளை அந்த சிறுவனுக்கு இந்த ஆசிரியை அனுப்பி இருக்கிறார்.

என்ன நடந்தது: இருவருக்கும் இடையே எப்படி இந்த உறவு ஏற்பட்டது.. எத்தனை காலம் இது போல அவர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர் மேலும், ஆசிரியை பெர்க்மானின் பேக்கில் நடத்திய சோதனையில், சிறுவனின் பெயருடன் ஒரு கவர் இருந்துள்ளது. அதில் அந்த சிறுவன் எழுதிய பல லெட்டர்கள் இருந்துள்ளது. ஆசிரியை பெர்க்மானும் தானும் இதுபோல பல கடிதங்களை மாற்றிக் கொள்வோம் என்று அந்த சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தார்.
மேலும், இருவருக்கும் இடையே ஸ்பெஷலான உறவு இருப்பதாக எல்லாம் அந்த ஆசிரியை பெர்க்மானிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் 24 வயதான பெர்க்மேனுக்கு ஏற்கனவே திருமணத்திற்கு நிச்சயம் நடந்துள்ளது. அதிலும் எப்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததோ கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் அவருக்கு இந்த சிறுவன் உடனும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
3 மாதத்தில் திருமணம்: அந்த ஆசிரியைக்கு 3 மாதங்களில் அதாவது ஜூலை மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து $25,000 (சுமார் ரூ. 21 லட்சம்) பத்திரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளில் நுழையவே பெர்க்மேனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு வருகிறதாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications