விபத்தில் சிக்கிய டைட்டன் நீர்மூழ்கி.. பலியான 5 கோடீஸ்வரர்கள்.. உடலை மீட்க வாய்ப்பு உள்ளதா?
வாஷிங்டன்: டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர். அவர்களின் உடலை மீட்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அமெரிக்க கடற்படை பதில் தெரிவித்துள்ளது.
கடந்த 1912 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணிநேரத்தில் தொடர்பை இழந்தது.

அவசர காலத்தில் தப்பிப்பதற்காக 96 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் அந்த நீர்மூழ்கி கலத்தில் இருந்தது. இதனால், முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது. திக் திக் நிமிடங்களுடன் இந்த மீட்பு பணி நீடித்து வந்த நிலையில், நீர் மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளது. நீர் மூழ்கி கப்பலின் சேதம் அடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், கப்பலில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர். டைட்டானிக் கப்பலை சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் ஐந்து பாகங்களாக நீர்மூழ்கி சிதைந்து கிடப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க கடலோரப்படை, அவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று எனவும் கூறியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications