அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி.. 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. பகீர் கிளப்பும் வீடியோ!
வாஷிங்டன்: அமெரிக்காவையும், சூறாவளியையும் பிரிக்க முடியாது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாகாணத்தை சூறாவளி புரட்டி போட்டு உயிர்பலி, பொருட்சேதம் ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை சூறாவளி புயல் தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. பலத்த சூறாவளியால் கென்டக்கியில் உள்ள பல மாவட்டங்கள் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன.

அதாவது அமெரிக்காவின் 5 மாநிலங்களில் ஒரே இரவில் சூறாவளி வீசியுள்ளது. அசுர பலத்துடன் சூறாவளி தாக்கியதால் கென்டக்கி மாகாணத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் என்று கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் கூறினார். இந்த சூறாவளி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக அவர் தெரிவித்துளளார்.
மேஃபீல்டில் ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பெஷியர் கூறினார். இதேபோல் இல்லினாய்ஸில் உள்ள ஒரு அமேசான் கிடங்கில் பலர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆர்கன்சாஸ் நகரமான மொனெட்டில் உள்ள முதியோர் இல்லத்தை சூறாவளி தகர்த்து எறிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிசோரி மற்றும் டென்னசி நகரங்களும் சூறாவளியில் சிக்கி சின்னபின்னமாகியுள்ளன. சூறாவளியால் அடித்து வீசப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், மரங்ககளின் கிளைகள் சாலைகளில் சிதறிகிடப்பதுபோல் இருக்கும் வீடியோக்கள், படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சேதம் மிக அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகள் கணக்கில் காட்டியதை விட மிக அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதிவேக சூறாவளி கற்பனைக்கு எட்டாத சோகத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
-
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications