சீனா மீது ட்ரம்ப் போட்ட வரி.. உலக வர்த்தகம் கடும் பாதிப்பு.. அதல பாதாளத்திற்கு போன எண்ணெய் விலை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 100 சதவீத வரி விதித்தார். இதன் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. அதேபோல் செயற்கை நுண்ணறிவு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் வேலை வாய்ப்புகளும் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா சீனா இடையே யார் பெரிய அண்ணன்? என்பது தொடர்பான போட்டி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்கா சார்ந்த நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அது சார்ந்த நடவடிக்கைகளுக்கும் தீவிரம் காட்ட தொடங்கினார்.

அமெரிக்கா - சீனா
இதனால் மற்ற நாடுகள் மீது பரஸ்பர வதியை தீட்டினார். இந்தியா மீதும் அமெரிக்க அதிபர் வரி விதித்தார். இதேபோன்று தான் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக வரி விதித்தார். சீனா மீது, 180 சதவீதம் வரி விதித்தார். ஆனால் எதற்கும் அஞ்சாத சீனாவும் பதிலுக்கு அமெரிக்கா மீது வரியை தீட்டியது. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் வரி விதித்து வந்தன.
சீனா மீது அமெரிக்கா 180 சதவீதம் விதித்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கோ அமெரிக்க பொருட்களுக்கு 175 சதவீதம் வரியை விதித்தார். மேலும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அரிய கனிமங்களின் அளவை குறைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உருவானது.
டிரம்பை மதிக்காத ஜி ஜின்பிங்
எனினும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரி விதிப்பை குறைத்தனர். இதன்படி தற்போது சீன பொருட்களுக்கு அமெரிக்கா 55 சதவீதம் வரி விதித்துள்ளது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைத்தது. எனினும் விட்டுக்கொடுக்காத ஜி ஜின்பிங் அமெரிக்காவில் இருந்து வாங்கும் விவசாய பொருட்களின் அளவை குறைத்தார். இதற்கு பதிலாக வேறு நாடுகளிடம் இருந்து விவசாய பொருட்களை வாங்க ஆரம்பித்தார்.
குறிப்பாக அமெரிக்க விவசாயிகளின் சோயாபீன்ஸை வாங்க சீனா மறுத்ததோடு, பிரேசில் பக்கம் சாய்ந்தது. இதனால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கடந்த 2 ஆம் தேதி கூறினார். ஆனால் இதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. டிரம்பை மதிக்காதது போல் அவரது முடிவு இருந்ததாக கருதப்படுகிறது.
சீனா மீது 100 சதவீதம் வரி
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கப்போவதில்லை என்று அறிவித்தார். நேற்று தன் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.. மாறாக சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி சீனா மீது 100 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
சீனாவின் அரிய மண் கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடியாக, நவம்பர் 1 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் மீண்டும் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உலகின் டாப்பில் உள்ள இரு பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் மூண்டுவிடும் சூழல் இருப்பதால் இன்று பங்குசந்தையில் பல பில்லியன்கள் வீழ்ச்சியடைந்தன.
S&P 500 குறியீடு (அமெரிக்காவில் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் 500 பெரிய நிறுவனங்களின் செயல்திறனை அளவிடும் பங்குச் சந்தைக் குறியீடு) 2.7% சரிந்தது. இது ஏப்ரலுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான சரிவாகும். அதேபோல் செயற்கை நுண்ணறிவு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் வேலை வாய்ப்புகளும் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறை
செயற்கை நுண்ணறிவு (AI) துறையுடன் தொடர்புடைய பங்குகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட டாட்-காம் குமிழி போல மீண்டும் ஒரு சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்தது என AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சி:
இந்த வர்த்தக வரி அச்சுறுத்தல் பங்குகளுக்கு மட்டுமின்றி, கமாடிட்டி மற்றும் எண்ணெய் சந்தைகளிலும் எதிரொலித்தது. அனைத்து துறைகளிலும் ஏற்படும் இந்த மந்தமான வளர்ச்சி, வேலை வாய்ப்புகளைப் பாதிக்கும். அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மீண்டும் வெடித்தால் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய வளர்ச்சி மந்தமடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில், குறிப்பாக ஏற்றுமதி, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications