ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே!
வாஷிங்டன்: ஈரான் விஷயத்தில் இப்போது நடப்பதை பார்த்தால், அமெரிக்கா தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டதை போல தெரிகிறது. காரணம், ஈரானின் துறைமுக முற்று நடவடிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறது.
பிரிட்டன் மட்டுமல்ல, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த விஷயத்தில் டிரம்புக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பதை தெளிவுப்படுத்தியிருக்கின்றன.

அமெரிக்காவின் திட்டம் இதுதான்
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை நிலையில், இந்த முற்றுகை திட்டத்தை அமெரிக்கா கையில் எடுத்திருக்கிறது. அதாவது ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களையும், துறைமுகத்திலிருந்து வெளியேறும் கப்பல்களையும் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தப்படும். இந்த திட்டம் இன்று காலை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு நட்பு நாடுகள் உதவும் என்று டிரம்ப் பேசியிருந்தார். ஆனால், அப்படியான எந்த உதவியும் இதுவரை வரவில்லை.
நட்பு நாடுகளின் நிலைப்பாடு
நீ போறதே ஒத்தையடி பாதை.. இதுல என்னைய வேற எங்கிருந்து கூப்பிடுற? என்கிற கணக்காக அமெரிக்காவின் நட்பு நாடுகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், "அமெரிக்கா அறிவித்திருக்கும் ஈரான் துறைமுகை முற்றுகையை பிரிட்டன் ஆதரிக்கவில்லை. இந்த போரில் பிரிட்டன் இழுக்கப்படாது" என்று சொல்லிவிட்டார்.
அதாவது, பஞ்சாயத்து ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும்தான். எங்களுக்கு கிடையாது என்று சைலண்டாக கழன்றுக்கொண்டது.
பிரான்ஸ் நிலைப்பாடு
அடுத்து பிரான்ஸ். பிரான்ஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "நாங்க மொத்தம் ரெண்டு பிளானை வைத்திருக்கிறோம். ஒன்னு நாங்கள் 'அமைதிக்கான பல்தேசிய' குழுவை உருவாக்குவோம். இரண்டாவது, 'தற்காப்பு சார்ந்த' குழுவை உருவாக்குவோம். இது ரெண்டையும் முன்வைத்து பிரிட்டனுடன் இணைந்து ஒரு மாநாட்டை நடத்துவோம் என்று கூறியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டது.
போய் வாருங்கள் டிரம்ப்
மூன்றாவது ஜெர்மனி. அமெரிக்கா விஷயத்தில் நாங்கள் ராணுவ நடவடிக்கையை எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டது. போதாத குறைக்கு டிரம்பின் அறிவிப்புகள் தெளிவற்றவை என்றும் சொல்லிவிட்டன. இப்படியாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் சைசாக கழன்றுக்கொண்டிருக்கின்றன. இப்படியாக தன்னை ஏசு ஆண்டவர் என்று அறிவித்துக்கொண்ட டிரம்ப், தனியாக தொங்கவிடப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications