வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு... டிரம்ப், மைக் பென்ஸ் முதன்முறை சந்திப்பு.. என்ன திட்டம்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் நேற்று மாலை ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

இவர்கள் இருவரும் நாடளுமன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதித்தார்களா? என்பது தெரியவில்லை என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Trump, Pence meet for 1st time after Capitol riot

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை அந்த நாட்டு நாடாளுமன்றம் சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறைக்கு பிறகு டிரம்பின் முக்கிய ஆதரவாளராக கருதப்பட்ட துணை அதிபர் மைக் பென்ஸுக்கும், டிரம்பிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க வன்முறை கும்பலுடன் தொடர்பு... 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்..ஒருவர் கைது! அமெரிக்க வன்முறை கும்பலுடன் தொடர்பு... 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்..ஒருவர் கைது!

ஜோ பைடனின் வெற்றியைத் மைக் பென்ஸ் அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்தபோது,. தான் அமெரிக்க அரசியலமைப்பின்படி செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.இந்த நிலையில் நாடாளுமன்ற வன்முறைக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், துணை அதிபர் மைக் பென்சும் நேற்று மாலை ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். நாடளுமன்ற வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடளுமன்ற வன்முறைக்கு பிறகு டிரம்பும், இந்த ஜோடி ஒரு "நல்ல உரையாடல் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதித்தார்களா என்பது தெரியவில்லை என்று கூறினார்.

English summary
For the first time since the capital violence, US President Trump and Vice President Mike Pence met at the Oval Office yesterday evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X