இஷ்டத்திற்கு நாடு கடத்த முடியாது! டிரம்பிற்கு கடிவாளம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்.. இந்திய மாணவர்களுக்கு நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கடந்த சில காலமாகவே தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால் பல ஆயிரம் மாணவர்கள் நாடு கடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில் டிரம்பின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் அமெரிக்க நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்குக் குடியேறியவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் அவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், இப்போது டிரம்ப் அரசு சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களையும் கூட குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாட்டு மாணவர்கள்
இதில் பெரிதும் பாதிக்கப்படுவது வெளிநாட்டு மாணவர்கள் தான். எங்கு தங்கள் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்திலேயே அமெரிக்க மாணவர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்தியா மாணவர்களுக்கு நிம்மதி தரும் உத்தரவை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் பல ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்ற நிலையில், அதை நிறுத்த அமெரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஜெஃப்ரி வைட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் அவை விதிகளைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
கடிவாளம் போட்ட நீதிமன்றம்
அமெரிக்க மாவட்ட பெடரல் நீதிபதி தனது 21 பக்க தீர்ப்பில் டிரம்ப் நிர்வாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அமெரிக்க பெடரல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சர்வதேச மாணவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் காட்டமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது டிரம்ப் அரசுக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய செக்காக பார்க்கப்படுகிறது.
அத்துமீறும் டிரம்ப் நிர்வாகம்
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கு மாணவர்களுக்கான எப்1 விசா வழங்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் இந்த எஃப்1 விசா வைத்திருப்போருக்கு எதிராகத் தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்கள் எதாவது சிறு விதிமீறலில் ஈடுபட்டாலும் அவர்களின் விசாவை ரத்து செய்து நாடுகடத்தலில் ஈடுபட்டுள்ளது.
விதிமீறல் மட்டும் இல்லை.. போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதாவது போலீஸ் தவறாகக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை இல்லை என்றால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்றே அர்த்தம். ஆனால், அவர்கள் மீதும் கூட டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல இந்தியர்கள் உட்பட 1000+ மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு நிம்மதி தருவதாக இருக்கும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உடனும் கூட டிரம்ப் நிர்வாகம் மோதல் போக்கைக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் டிரம்ப் அரசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பரிமாற்ற திட்டத்தின் சான்றிதழை திடீரென ரத்து செய்திருந்தது. அதாவது சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கான பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தைப் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றமும் டிரம்ப் நிர்வாகத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications