சீனாவின் கடும் எதிர்ப்பை கண்டுகொள்ளாத டிரம்ப்.. திபெத்துக்காக போட்ட அதிரடி கையெழுத்து!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் எச்சரிக்கையை மீறி, அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுபபதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டார்.

இன்னும் சில வாரங்களில் பதவியில் இருந்துவிலகப்போகிறார் டொனால்டு டிரம்ப். வரும் ஜனவரி 20ம் தேதி ஜோபிடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். டிரம்பின் பதவி காலம் முடிய இன்னும் 22 நாட்கள் உள்ள நிலையில் பல்வேறு முக்கிய மசோதாக்களில் டிரம்ப் கையெழுத்திட்டு வருகிறார். அண்மையில் கொரோனா தடுப்பு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார்.

Trump signed off on legislation that reaffirms right of Tibetans to choose a successor to Dalai Lama

அதனைத் தொடர்ந்து சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தலாய் லாமாவின் அடுத்த வாரிசைத் (அடுத்த தலாய்லாமாவை) தேர்ந்தெடுப்பதற்கான திபெத்தியர்களின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார், இது திபெத்திய அரசாங்கத்தின் நாடுகடத்தப்பட்டவர்களால் திபெத்திய மக்களுக்கு "நம்பிக்கை மற்றும் நீதிக்கான சக்திவாய்ந்த செய்தி" திபெத்தியர்களால் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த வாரம் திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டத்தை நிறைவேற்றியது, சீன வெளியுறவு அமைச்சகத்தின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தனது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் முயற்சி என்று சீனா எச்சரித்திருந்தது. அதை கண்டுகொள்ளாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,

திபெத்தின் முக்கிய நகரமான லாசாவில் ஒரு அமெரிக்க துணைத் தூதரகத்தை நிறுவ வேண்டும் . 14 வது தலாய் லாமாவிற்கு வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கும், திபெத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் திபெத்தியர்களுக்கு முழுமையான உரிமை உள்ளதாக இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+