வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரும் காலத்துல உருமாறிய கொரோனா பாதிப்பு ரொம்ப மோசமா இருக்கும்.. எச்சரிக்கும் ஆன்டனி பவுசி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வரும் ஏப்ரல் மாதம் தொங்கி, பிரிட்டனின் உருமாறிய கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் மோசமாக இருக்கும் என்று அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய உருமாறிய கொரோனா வகையைக் கண்டறிந்தனர்.

UK Covid Strain To Become More Dominant In US By Early Spring says Top Expert

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்தானது இல்லை என்றாலும்கூட மற்ற கொரோனா வகைகளைவிட வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா இதுவரை 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதேபோல அமெரிக்காவின் 28 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 315 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மார்ச் இறுதி தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் இந்த உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரிக்கத் தொடங்கும் என்று அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் விரும்பினால்... பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரெடி.. பிரகலாத் ஜோஷி உறுதி!விவசாயிகள் விரும்பினால்... பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரெடி.. பிரகலாத் ஜோஷி உறுதி!

அதேபோல தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றும் அவை தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதற்குத் தேவையான ஆய்வு முடிவுகளை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1.69 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.65 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல நேற்று சுமார் 3,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

English summary
The new strain of the novel coronavirus that first appeared in the United Kingdom will become more dominant in the United States by the middle of spring, US National Institute of Allergy and Infectious Diseases Director Anthony Fauci said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X