ஐநாவையும் பதம் பார்த்த நெருக்கடி.. 7000 பேர் வேலைக்கு ஆப்பு! எல்லாம் டிரம்ப் பார்த்த வேலைதான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருப்பதால், ஐநா நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே, 7000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப ஐநா திட்டமிட்டிருக்கிறது.

ஐநா சபைக்கு உலக நாடுகள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றன. இப்படி இருக்கையில், அமெரிக்கா தான் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐநாவுக்கு தோராயமாக 74.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. இதில் 25% அளவுக்கு அதாவது 13 பில்லியன் அளவுக்கு அமெரிக்கா பங்களிக்கிறது.

UN job jobs

இதில் 6.38 பில்லியன் அளவுக்கு ஐநாவின் அமைதிப்படையினருக்கு செலவழிக்கப்படுகிறது. 66,839 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நிர்வாக செலவுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா நிதியை வெட்டியிருப்பதால் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஐநா திட்டமிட்டிருக்கிறது.

ஐநா கட்டுப்பாட்டாளராக உள்ள சந்திரமௌலி ராமநாதன் இது குறித்து கூறுகையில், "மொத்த நிதியில் 20% அளவக்கு அடிவாங்கியிருப்பதால் 6900 வேலை வாய்ப்புகளை குறைக்க இருக்கிறோம். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஜூன் 13ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும்" என்று கூறியிருக்கிறார். இதற்கு இன்னொரு காரணம் சீனா போன்ற நாடுகள் இன்னும் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. கொஞ்சம் தாமதமாகலாம் என்று சொல்லியிருக்கிறது.

உலக நாடுகள் சேர்ந்து இப்படி ஐநாவின் முதுகில் குத்துவதால், சர்வதேச அளவில் கோடிக்கணக்கான சாமானிய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இன்றை தேதியில் ஐநாவில் மனிதாபிமான உதவிகளை ஐநாதான் அதிக அளவில் செய்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் எச்ஐவி போன்ற உயிர்கொல்லி நோய்களை எதிர்த்து போராடுவதிலும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும், நோய் தடுப்பை தீவிரப்படுத்தவும் ஐநாவின் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியை எதிர்த்து போராடும் பணிகளையும் ஐநா மேற்கொண்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் நிதி வெட்டால் இந்த சேவகைள் பாதிக்கப்பட்டு மேலே சொன்னதை போல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த காலங்களில் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் செலுத்தவும், புதிய முயற்சிகளுக்காக நிதியை பாதுகாக்கவும் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் இப்படியான பணி நீக்கங்கள் இயல்பானதாக சொல்லப்பட்டாலும், ஐநாவில் பணி நீக்கம் என்பத அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+