ட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்!!
வாஷிங்டன்: எப்படி அதிபர் பதவியில் இருந்து கொண்டு ஒழுங்கற்ற, தவறான ஆட்சியை நடத்தினாரோ அதேபோல்தான் தற்போது கொரோனா நோயையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையாண்டு இருக்கிறார் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் இருவரும் போட்டியிடுகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் மீண்டும் ட்ரம்ப் பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்.

பிளவு
ஃபுளோரிடாவில் நேற்று பிரச்சாரம் செய்த ஜோ, ''ட்ரம்ப்பின் தலைமை அமெரிக்காவில் பிளவுபடுத்தும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருந்தது. இதற்காக அமெரிக்கர்கள் அதிக விலையை கொடுக்க வேண்டியது இருந்தது. மக்களுடன் ட்ரம்ப் விளையாடி விட்டார், ஆனால், அதேசமயம் அவர் மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டார்.

சலுகை
இவரது தவறான ஆட்சியால் புளோரிடாவில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருக்கும் முதியவர்கள் தங்களுக்குத் தேவையான சலுகைகளை பெற முடியாமல் போனது. நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. இதையேதான் மக்களும் குறிப்பிடுகின்றனர்.

விலை உயர்வு
கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் பொழுதை கழித்து வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்தபோது என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மருந்து நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர் கணக்கில் வரி விலக்கு அளித்தார். ஆனால், அவர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள், உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தினார்கள். தற்போது கொடிய தொற்று நோய் மக்களை ஆட்கொண்டு இருக்கும்போதும், மருந்துகளின் விலையை அவர்கள் குறைக்கவில்லை.

இன்சூரன்ஸ்
இதை இப்போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் ட்ரம்ப். இதற்குக் காரணம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் அனைத்தும் அவரது கையில் உள்ளது'' என்றார்.

ஜோ முன்னணி
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை இந்த மாநிலம் ட்ரம்ப்புக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பைவிட பைடன் 3.7% வாக்குகள் அதிகமாக பெற்று இருந்தார்.

ட்ரம்ப்
இங்கு ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தபோது மாஸ்க் அணியாமல் கலந்து கொண்டார். இது விவாதத்துக்கு உள்ளானது. சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications