அமெரிக்க இந்தியர்களே உஷார்.. இதை மட்டும் செய்யாதீங்க! விசாவுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் தாக்குதல் சம்பவங்களிலோ, திருட்டு சம்பவங்களிலோ ஈடுபட்டால் இந்தியர்களின் விசா ரத்து செய்யப்படும் என அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள 'டார்கெட்' எனும் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர், சுமார் 7 மணி நேரம் பொருட்களை தேடி, தேடி எடுத்திருக்கிறார். ரூ.1.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்த அவர், அங்கிருந்து பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆக முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து, அமெரிக்க தூதரகம், விசா குறித்த எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து மேலும் ஒரு எச்சரிக்கை தகவலாக, "கொள்ளை போன்ற செயல்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவிற்கு உங்களை தகுதியற்றதாக ஆக்கக்கூடும். அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதைத் தடுக்கலாம்" என்றும் அறிவுரையை தூரதகம் கொடுத்திருக்கிறது. மேலும், "வெளிநாட்டு மக்கள், அமெரிக்காவின் சட்டத்தையும், ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும்" என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன. ஆனால் இந்தியர்களை பொருத்தவரை, இந்த தண்டனைகள் வழங்கப்படுவதற்கு பதில் அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவுக்குள் இருப்பது சட்டவிரோதமாக கருதப்படும். எனவே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இது சுயமரியாதையை பாதிக்கும் நடவடிக்கை.
சூப்பர் மார்க்கெட்டில் நடந்த விஷயத்தை பொறுத்தவரை, இந்திய பெண் நீண்ட நேரமாக ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார் என்றும், அங்கும் இங்கும் தேவையில்லாமல் நடந்துக்கொண்டு, செல்போனை நோண்டிக் கொண்டு, நேரத்தை வேண்டும் என்றே விரயம் செய்தார் என சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தான் வாங்கிய பொருட்களுடன் அவர் மேற்கு வாசல் வழியாக வெளியே போக முயன்றபோது பிடிபட்டிருக்கிறார்.
இறுதியில் அப்பெண் தான் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுக்க முன்வந்திருக்கிறார். ஆனால், ஊழியர்கள் போலீசை அழைத்திருக்கின்றனர். இப்போது வரை இந்திய பெண் கைது செய்யப்படவில்லை. ஆனால், விசா ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 1ம் தேதி நடந்திருக்கிறது. இந்திய பெண்ணை பிடித்த போலீசார், "இந்தியாவில் பொருட்களைத் திருட உங்களுக்கு அனுமதி உண்டா? அப்படி இருக்க வாய்ப்பில்லை" என்று கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வபர்கள் அங்கு தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள கடுமையான போராடி வருகின்றனர். வேலை வாய்ப்புகள், வேலைக்கு ஏற்ப ஊதியம், செலவுகள் உள்ளிட்டவை அமெரிக்காவில் வாழ்வதை மேலும், மேலும் கடுமையானதாக மாற்றி வருகிறது. இந்நிலையில், ஷாப் லிஃப்டிங் எனப்படும் சூப்பர் மார்க்கெட்டில் வெளிநாட்டினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications