"ஈரானை மொத்தமாக அழிப்போம்." தடாலடியாக மிரட்டும் டிரம்ப்! நாளை வாழ்வா - சாவா பேச்சுவார்த்தை!
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்பட்டாக வேண்டும் என்றும் இல்லையென்றால்.. ஈரானின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே இப்போது தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே இருக்கிறது. வளைகுடாவில் பதற்றம் தொடரும் நிலையில், எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், குழப்பம் அதிகரித்தது.

மிரட்டல்
இந்தச் சூழலில் தான் இப்போது இரு நாடுகளுமே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். நான் சொல்லும் டீலுக்கு ஒப்புக்கொள்ளுங்கள்... இல்லை என்றால் உங்கள் நாட்டில் ஒரு மின் நிலையத்தையும், ஒரு பாலத்தையும் கூட விட்டு வைக்கமாட்டேன் என மிரட்டியுள்ளார். நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் ஈரானுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நஷ்டம்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும், "பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டுச் சரக்குக் கப்பல்களை நோக்கி ஈரான் சுட்டிருக்கிறது. இது ஒன்றும் நல்ல விஷயம் இல்லை. ஈரானின் இந்தச் செயல் அவர்களது பொருளாதாரத்தையே அழிக்கும் செயல்.. ஜலசந்தி மூடப்படுவதால் ஈரானுக்குத் தான் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர் நஷ்டம். அமெரிக்காவிற்கு ஒரு நஷ்டமும் இல்லை.. எல்லா கப்பல்களும் இப்போது டெக்சாஸ் மற்றும் அலாஸ்கா துறைமுகங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப்
ஒரு பக்கம் மிரட்டல் விடுத்தாலும், மறுபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளையும் டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காகத் தனது விசுவாசமான தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார். அதேநேரம், கடந்த முறை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் நேரடியாகச் சென்றிருந்த நிலையில், இந்த முறை அவர் செல்லவில்லை.
பேச்சுவார்த்தை குறித்த தகவல்களைப் பகிர்ந்த டிரம்ப் கையோடு மிரட்டலையும் விடுத்து இருக்கிறார். ஈரானுக்கு ஒரு நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒப்பந்தத்தை அமெரிக்கா வழங்கும் என்றும் அதை ஏற்காவிட்டால் ஈரான் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார்.
நிச்சயம் ஏற்கணும்
இது தொடர்பாக அவர் மேலும், "நாங்கள் ஒரு நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒப்பந்தத்தை வழங்குகிறோம். அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில், அவர்கள் அதைக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்த்துவிடும்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள் -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்!












Click it and Unblock the Notifications