அமெரிக்கா பிரபலங்களின் காமலீலைகள்.. 30 லட்சம் பக்க எப்ஸ்டின் பைல்ஸ் வெளியீடு.. சிக்கும் டிரம்ப்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் பெரும் பணக்காரராக வலம் வந்த பாலியல் குற்றவாளியாக அறியப்படுபவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட பல பிரபலங்களுக்கு நெருக்கமாக இருந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் எப்ஸ்டீன் பைல்ஸ் என்ற பெயரில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் எப்ஸ்டீன் பைல்ஸின் 30 லட்சம் பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெஃப்ரின் எப்ஸ்டீன் என்பவர் பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகளிலிருந்து நிதி பெற்று தரும் பணியை மேற்கொண்டு வந்தார்.
இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரிய தலைகளுடன் தொடர்பு இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாலியல் குற்றச்சாட்டுகள்
'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' எனும் தீவில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் 2008ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
சிறையில் தற்கொலை
கடந்த 2019ல் மீண்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் எப்ஸ்டீன். அதன்பிறகு 2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே கதையை முடித்ததாக சொல்லப்படுகிறது.
பிரபலங்களின் பெயர்கள்
ஏனென்றால் எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களில் (எப்ஸ்டீன் பைல்கள்) பல பிரபலமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது நீதிமன்ற ஆவணங்களாகும். பாலியல் வன்புணர்வுக்காக சிறுமிகளை கடத்திய கும்பலுடன் தொடர்புடைய ஆவணங்கள், சாட்சியங்களை உள்ளடக்கியதாகும்.
டிரம்ப்பின் நண்பர்
ஆனால் இதுவரை இவரது வழக்கு ஆவணங்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை. அதில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் - ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர்.
இருவரும் இளம்பெண்களுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த வழக்கு ஆவணங்கள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
30 லட்சம் பக்க ஆவணங்கள்
இந்நிலையில் தான் அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீனின் விசாரணை ஆவணங்களை நேற்று வெளியிட்டுள்ளது. இதுபற்றி துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறுகையில், ‛‛3 மில்லியனுக்கும் (30 லட்சம்)அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 படங்களை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடுவதாக கூறப்பட்டது. அதன்பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது நீதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என்றார். நீதித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
எலான் மஸ்க் - பில்கேட்ஸ் பெயர்
இந்த ஆவணத்தில் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ என்ற ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் - வின்ட்ச்சர், எலான் மஸ்க், பில்கேட்ஸ் உள்பட பல பிரபலங்கள் தொடர்புடைய இ-மெயில் உள்பட பிற ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வெளியாகி உள்ள எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரம் அமெரிக்காவில் பெரும் புயலை கிளப்ப வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications