அதிர்ஷ்டம்னா இதுதான்! லாட்டரியில் ஒரு நம்பரால் மிஸ் ஆன 5 கோடி.. ஆனால் அடுத்த நாள் கொட்டிய மெகா பரிசு
வாஷிங்டன்: ஒரே ஒரு எண் மாறியதால் லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு பெறும் வாய்ப்பு போனதால் விரக்தியில் இருந்த 53 வயது நபருக்கு மறுநாளே 6 கோடி பரிசு அடித்து இருக்கிறது. கொடுக்கிற தெய்வம் இப்படித்தான் கொட்டி கொடுக்கும் போல பார்ப்பவரை பொறாமை பட வைத்து இருக்கிறார் அந்த அமெரிக்க நபர். இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்..
ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாக மாறினால் எப்படி இருக்கும் என பகல் கனவு காணாத நபர்களே இருக்க முடியாது. இதெல்லாம் நிஜத்தில் நடக்க வேண்டும் என்றால் லாட்டரியில் பரிசு அடித்தால்தான் உண்டு என மனதிற்குள் பலரும் நினைப்பார்கள்.. பல வருடங்களாக லாட்டரியில் பரிசு அடிக்கும் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து ஏமாந்து போகிறவர்களும் ஒருபக்கம் இருக்கின்றனர்.

ஆனால், சிலருக்கோ வாங்கிய முதல் டிக்கெட்டில் கூட பரிசு விழுந்து அவர்களை கோடிஸ்வரர்கள் ஆக்கி விடும். அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று எளிதில் சொல்லிவிட முடியாது. எதிர்பாராத விதமாக கோடீஸ்வரர்கள் ஆக்கிவிடுகிறது. ஆனாலும் லாட்டரியால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்தாலும் ஆயிரக்கணக்கான நபர்கள் பணத்தை இழந்து பொருளாதார இழப்பை சந்திப்பதால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் தடை இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் இருக்கட்டும்.. சரி இங்கெ விஷயத்திற்கு வருவோம்.. லாட்டரியில் முதல் நாளில் 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஒரு எண்ணில் தவற விட்டவருக்கு மறுநாளே கூடுதலாக ஒரு கோடி அதாவது ரூ.6 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரியில் பரிசு அடித்து இருக்கிறது. இது குறித்த விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மால்கோம் கவுண்டியை சேர்ந்த 53 வயது நபர் ஒருவருக்கு லாட்டரியில் டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்று வாங்கினார். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு அடித்த $610,000 (இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய்) பரிசுத்தொகை விழுந்துள்ளது.
லாட்டரி டிக்கெட்டில் பரிசுத்தொகை விழுந்த எண் தன்னிடம் உள்ளிட்ட லாட்டரி டிக்கெட் எண் போலவே இருக்கிறதே என ஆசையுடன் வீட்டிற்கு ஓடிப்போய் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ஒரு எண்ணில் 5 கோடி பரிசுத்தொகை கை நழுவியது. இதனால், விரக்தி அடைந்த அந்த நபர், மறுநாளே அடுத்த 2 லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
அந்த டிக்கெட்டிற்க்கான குலுக்கல் முடிந்ததும் அவருக்கு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் கை நழுவிய 5 கோடியை விட கூடுதலாக ஒரு கோடி சேர்த்து அதாவது 6 கோடி ரூபாய்க்கான பரிசு அவருக்கு அடித்தது. இதனால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற நபர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார். தனக்கு அதிர்ஷ்டம் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு 24 மணி நேரத்தில் கிடைக்காமல் போன தொகையை விட கூடுதல் தொகை கிடைத்துள்ளதால் இவர்தான் உண்மையான லக்கிமேன் என அவரது நண்பர்கள் அவரை சொல்லி வருகிறார்களாம்..












Click it and Unblock the Notifications