அடித்த நபருக்கே "மீண்டும்" லாட்டரி பரிசு.. 6 மாதத்தில் 2 முறை.. உண்மையான "லக்கி மேன்" இவர்தான்!
வாஷிங்டன்: லாட்டரி வாங்கியவர்கள் ஒருமுறையாவது பரிசு அடிக்காதா என ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு 6 மாதத்தில் இரண்டு முறை லாட்டரி அடித்து அவரை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல லட்ச ரூபாயை வென்று லாட்டரி சீட்டு வாங்கும் பலரையும் பொறாமை பட வைத்திருக்கிறார் அந்த லக்கி மேன்.
ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் அது லாட்டரியால் மட்டுமே சாத்தியம். எனவே எப்படியாவது சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று பலரும் லாட்டரி சீட்டு வாங்குகின்றனர். ஆனால் அப்படி லாட்டரி சீட்டு வாங்குகிற எல்லாரும் பணக்காரர் ஆவதில்லை. அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ அவர்களே இப்படி லாட்டரி வாங்கி பணக்காரர் ஆகியுள்ளனர்.

அப்படி, லாட்டரி வாங்கியவர்கள் ஒருமுறையாவது பரிசு அடிக்காதா என ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், 6 மாதத்தில் இரண்டு முறை பல லட்ச ரூபாயை வென்று பொறாமை பட வைத்து இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த லக்கி மேன். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் 6 மாத இடைவெளியில் 2 முறை லாட்டரியில் 90 லட்ச ரூபாயை பரிசாக ஒருவர் வென்றுள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இரண்டு முறை லாட்டரியில் பரிசு: இந்தியாவில் கேரளா, நாகாலந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. அதேபோல பல்வேறு நாடுகளில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் லாட்டரி குலுக்கலில் அவ்வப்போது இந்தியர்களும் லாட்டரியில் பரிசு அடித்து பல கோடிகளுக்கு அதிபதி ஆன செய்திகள் வெளியாகி வருவதை கேள்வி பட்டு இருக்கிறோம்.
அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனையாகிறது. எதார்த்தமாக லாட்டரி வாங்கிய பலரும் நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் லாட்டரி பரிசாக அடித்ததாக சிலாகிக்கும் செய்திகளும் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கும். அந்தவகையில், தற்போது அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த வயேன் கவுண்டியை சேர்ந்த ஒருவருக்கு 6 மாதத்தில் இரண்டு முறை லாட்டரியில் பரிசு அடித்து இருக்கிறது.
கடவுள் பெரிய பரிசு கொடுத்து இருக்கிறார்: ஃபேண்டசி டபுள் பிளே லாட்டரி ஜாக்பாட்டில் அடுத்தடுத்து $110,000 (இந்திய மதிப்பில் ரூ.91,1309) பரிசு விழுந்து இருக்கிறது. தனக்கு பரிசு விழுந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என நினைத்த அந்த நபர் தனது அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என சொல்லிவிட்டாராம். கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்திருந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 11 ஆம் தேதி அங்குள்ள பெட்ரோல் பங்கில் வாங்கியிருக்கிறார்.
முதலில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்த அந்த பணத்தையே இன்னும் எண்ணிக்கொண்டு இருந்த 59 வயதான அந்த நபருக்கு ஆறே மாதத்தில் 2 வது முறை பரிசு அடித்தது எல்லையில்லா ஆனந்தத்தை கொடுத்துள்ளதாம். நடப்பது கனவா.. இல்லை நிஜமா என்று நம்ப முடியாத அளவுக்கு இருப்பதாகவும் எனக்கு கடவுள் பெரிய பரிசு கொடுத்து இருக்கிறார் எனக்கூறும் அந்த நபர் முதலில் விழுந்த பரிசுத்தொகையை வைத்து தனது கடனை அடைத்துவிட்டதாகவும்.. தற்போது கிடைத்துள்ள பணத்தை ஜாலியாக செலவு செய்ய இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications