3..2..1! சீறி பாய தயாராகும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்! மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா
வாஷிங்டன்: மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் முதல் ராக்கெட் புதன்கிழமை விண்வெளியில் பாய உள்ளது.
அமெரிக்கா தான் முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 1972இல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றனர்.
அதன் பின்னர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் உலக நாடுகளின் ஆர்வம் குறைத்தது. ரோவர் உள்ளிட்ட கருவிகளை நிலவுக்கு அனுப்பி, அதன் மூலமே நிலவு குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

அமெரிக்கா
இதற்கிடையே இப்போது மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டம் தான் ஆர்ட்டெமிஸ்-1. பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் மனிதர்கள் மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதில் முதற்கட்ட சோதனையாக ஆளில்லா ராக்கெட்டை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் தான் வரும் புதன்கிழமை விண்ணில் பாய உள்ளது.

நாசா
பல்வேறு காரணங்களால் ஏற்கனவே இந்த திட்டம் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முயற்சிக்கு இப்போது நாசா பச்சைக் கொடி காட்டி உள்ளது. அதன்படி வரும் நவம்பர் 16ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 11.34 மணி அளவில் கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இதற்கு மிஷன் நிர்வாகக் குழு அனுமதி அளித்திருந்தது.

விண்வெளி ஏவு தளம்
அமெரிக்காவில் ஏற்பட்ட நிக்கோல் சூறாவளி காரணமாக ஏவுதளம் இருக்கும் கேப் கனாவரல் பகுதிகளில் பாதிப்புகள் அதிகம். இதனால் இன்று பிற்பகல் மீண்டும் மிஷன் நிர்வாகக் குழு ஆலோசனை நடத்த உள்ளது. அதில் சூறாவளியால் ராக்கெட்டின் முக்கிய பகுதிகளில் எதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்துக் கூடுதலாக ஆய்வு செய்ய உள்ளனர். ராக்கெட்டில் உள்ள முக்கிய பிளேட்கள பொறியாளர்கள் மாற்ற உள்ளனர்.

சீரற்ற டேட்டா
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் தான கனெக்டருக்கு கேபிளை அவர்கள் மாற்றி இருந்தனர். ஆனாலும், இன்னும் கூட அதில் சில சீரற்ற டேட்டாவே கிடைப்பதாக நாசா கூறுகிறது. அதாவது தேவையற்ற டேட்டாகள் அதில் நிறையவே வருகிறது. இதுபோல சில சிக்கல்கள் இருந்த போதிலும் இவை ராக்கெட் லான்சை எந்த விதத்திலும் பாதிக்காது என்றே நாசா கூறுகிறது.

சூறாவளி
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் புதன்கிழமை ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது உறுதி. கடந்த வாரம் கென்னடி விண்வெளி மையம் வழியாக நிக்கோல் சூறாவளி வீசிய போதிலும், அது ராக்கெட்டை பாதிக்கவில்லை. இருப்பினும், இந்த சூறாவளி குறித்து முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், அதை இன்னும் கூட பாதுகாப்பாக வைத்திருப்போம் என்பதை நாசா ஒப்புக் கொண்டு உள்ளது.

சோதனை
322-அடி (98-மீட்டர்) உயரம் கொண்ட இந்த ராக்கெட் இதுவரை நாசாவால் உருவாக்கப்பட்டதில் மிகவும் சக்தி வாய்ந்தது. ராக்கெட்டின் மேல் இருக்கும் காப்ஸ்யூலில் மூன்று சோதனை டம்மிகள் இருக்கின்றன. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மனிதர்களை நாசா நிலவுக்கு அனுப்ப உள்ளதால், இதில் எந்தவொரு சிக்கலும் வரக் கூடாது என்பதில் நாசா உறுதியாக உள்ளது. இதனஅ காரணமாகவே பல கட்ட சோதனைகளை அது செய்கிறது.

2024 திட்டம்
2024ஆம் ஆண்டில் நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் இந்த சோதனை நடைபெறுகிறது. முன்னதாக திட்டமிடப்பட்டு இருந்த இரு சோதனை முயற்சிகள் எரிபொருள் கசிவுகளால் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. செப். மாதம் நடக்க இருந்த சோதனை இயன் சூறாவளியால் இந்த முயற்சியை மேலும் லேட்டாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications