"இனவெறி.." இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் பரபர கருத்து! உடனே ஓடி வந்து விளக்கமளித்த வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறிய கருத்துகள் பெரும் விவாதமாக மாறிப் போன நிலையில், வெள்ளை மாளிகை இது குறித்து உடனடியாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கு இப்போது முதலே தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே இந்தியா, ஜப்பான் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பான் மற்றும் இந்தியாவை அவர், சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பீட்டு இனவெறி நாடுகள் என்பது போலக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பைடன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அதிபர் பைடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தான் அவர் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். வெளிநாட்டினர் மீதான வெறுப்பு இந்த நாடுகளின் வளர்ச்சியைத் தடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிய அமெரிக்கர்கள் கலந்து கொண்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய பைடன், "எங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு என்ன காரணம் என நினைக்கிறார்கள். நீங்களும் உங்களைப் போன்ற பலரும் தான் காரணம்.. அது எப்படி? நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவோரை எங்கள் நாடுகளில் வரவேற்கிறோம். அதுவே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம்.
டிரம்ப் vs பைடன்.. அமெரிக்காவில் வெல்ல போவது யார்? அடடே "அவரே" சொல்லிட்டாரே.. அப்போ முடிவு கன்பார்ம்
இனவெறி: சீனா ஏன் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் ஸ்தம்பித்து நிற்கிறது. ஜப்பான் இப்போது ஏன் சிக்கலில் இருக்கிறது? ஏன் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டில் இருந்து வருவோரைப் பாகுபாட்டுடன் (xenophobic) நடத்துகிறார்கள்.. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை விரும்பவில்லை. ஆனால், அதே புலம்பெயர்ந்தவர்கள் தான் எங்களை வலிமையாக்குகிறார்கள்" என்றார்.
அவர் கூறிய இந்த லிஸ்டில் ரஷ்யா, சீனா இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால், இந்தியா மற்றும் ஜப்பானை அவர் இந்த லிஸ்டில் சேர்த்து உள்ளது தான் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. ஏனென்றால் கடந்த 2021இல் அதிபராகப் பதவியேற்றது முதல் இந்தியா மற்றும் ஜப்பான் உடனான உறவுகளை மேம்படுத்த பைடன் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஜப்பான்: 3 வாரங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்ற ஜப்பான் பிரதமர் அங்கு அரசு விருந்தில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது இரு நாடுகளும் இடையே உடைக்க முடியாத கூட்டணி இருப்பதாகவும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைக் காக்க இரு நாடுகளும் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளதாக எல்லாம் பைடன் கூறியிருந்தார்.
அதேபோல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார். இப்படி இருக்கும் நிலையில், பைடன் இதுபோன்ற கருத்துகளைக் கூறியுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெள்ளை மாளிகை: இதற்கிடையே அமெரிக்க அதிபர் பைடனின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. அதாவது, "அமெரிக்க அதிபர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உலகெங்கிலும் உள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். உலகிலேயே அமெரிக்கா தான் புலம்பெயர்ந்தவர்களைப் பெரியளவில் ஆதரிக்கும் நாடாக உள்ளது.
அமெரிக்கா மற்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடாகும். எங்கள் டிஎன்ஏவிலேயே அது இருக்கிறது. அதிப் பைடன் நட்பு நாடுகளை எவ்வளவு மதிக்கிறார் என்பது எங்கள் நட்பு நாடுகளுக்கு நன்றாகவே தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications