ஜோ பைடனுக்கு எதிராக ஒபாமா உள்பட முக்கிய தலைகள்! அமெரிக்க அதிபர் வேட்பாளராகும் கமலா ஹாரிஸ்? ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவேன் என ஜோ பைடன் பிடிவாதம் பிடித்து வருகிறார். இந்நிலையில் தான் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிக வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். அவர் குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். அதேபோல் வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் களமிறங்குவதில் ஆர்வமாக உள்ளார். மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவேன் என பிடிவாதமாக உள்ளார்.
ஜோ பைடனுக்கு பின்னடைவு: ஆனால் ஜோ பைடனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால் ஜோ பைடன் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். இதில் ஜோ பைடன் சரியான வாதங்களை முன்வைக்கவில்லை. இதுவும் அவருக்கு எதிராக திரும்பியது.
அதன்பிறகு பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காதில் காயமடைந்த டிரம்புக்கு தற்போது ஆதரவு அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஜோ பைடன் கட்டாயம் அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஒபாமா: இதுதொடர்பாக ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், ‛‛ஜோ பைடனின் வெற்றி பெறும் தன்மை என்பது குறைந்து விட்டது. இதனால் அவர் வெற்றி பெற முடியுமா? என்பதையும், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான் பெலோசியும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட்டால் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல் மொன்டானா செனட்டர் ஜோன் டெஸ்ட்டர் கூறுகையில், ‛‛நான் ஜோ பைடனுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். ஜோ பைடன் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடாது. மற்றவருக்கு அவர் வாய்ப்பை வழங்க வேண்டும். இப்போது இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் தவறான செயலுக்கு எதிராக குரல் கொடுக்க எப்போதும் பயந்தது இல்லை. அதேவேளையில் நான் அவரது பணியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன் '' என தெரிவித்துள்ளார்
ஜோ பைடன் விலகல்?: இப்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஜோ பைடன் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இதனால் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதற்கான பிரஷர் அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் பின்வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸ்: ஒருவேளை ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறும்போது அடுத்ததாக துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயர் முன்னிலையில் உள்ளது. இதனால் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் கமலா ஹாரிசும், ஜோ பைடனுக்கு கீழ் துணை அதிபராக உள்ளதால் அவர் மீதும் சிலருக்கு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் புதிதாக 2 பேர் ரேஸில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் கலிபோர்னியா கர்வர் கவின் நியூசோம் மற்றும் மிச்சிகன் கவர்னர் கிரேட்டசர் ஒயிட்மர் ஆகியோர் ஜனநாயக கேட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications