‛‛நெருங்கும் அதிபர் தேர்தல்’’.. டிரம்பை ஆக்ரோஷமாக திட்டி தீர்த்த ஜோ பைடன்.. புதினையும் விடலையே!
வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இடையே தான் போட்டி இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பை, ஜோ பைடன் கடுமையாக திட்டி உள்ளதோடு, ரஷ்ய அதிபர் புதினுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என ஆணித்தனமாக கூறினார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடக்கும். கடந்த 2020ல் நடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலிலும் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். தற்போது அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மேலும் பல்வேறு கருத்து கணிப்புகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜோ பைடனால் மீண்டும் வெற்றி பெற முடியா. டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டொனால்ட் டிரம்புக்கு எதிரான வழக்குகள் என்பது அவரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டேட் ஆஃப் யூனியனில் ஜோ பைடன் பேசினார். நீதிபதிகள், எம்பிக்கள், அரசு துறை முக்கிய தலைவர்கள் இருந்த அரங்கிற்கு அவர் வந்தார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் இன்னும் 4 ஆண்டுகள் இன்னும் 4 ஆண்டுகள் என ஜோ பைடனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அங்கு ஜோ பைடன் பேசியபோது கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி லிங்கன் ஆட்சியில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு போர் சூழல், சுதந்திரம் மற்றும் உள்நாட்டு ஜனநாயகம் என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுதந்திரம், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது என்பது எங்களுக்கான வாய்ப்பை குறைக்கிறது.
குடியரசு கட்சியின் ஆட்சியில்(டொனால்ட் டிரம்ப் பெயரை குறிப்பிடாமல்), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வணங்கினார். ஆனால் நான் புதினுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். மேலும் நான் அதிகாரத்தை பிடித்தபோது நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் இன்று அமெரிக்க பொருளாதாரம் என்பது பிற நாடுகள் பொறாமைப்படும் அளவில் உள்ளது. மூன்று ஆண்டுகளில் 15 மில்லியன் புதிய வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சாதனை. அதோடு நாட்டின் வேலையின்மை என்பது 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது'' என கூறினார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications