பெரிய பிளானுடன் இந்தியா வரும் அமெரிக்க அதிபர்.. ஜோ பைடனின் 3 நாள் டூர்! தொடங்கிய ஜி 20 மாநாடு பீவர்
வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 ஆம் தேதி 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி நகரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அந்த மாநாட்டின் இறுதியில் ஜி-20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்று, அந்த நாட்டில் ஜி20 கூட்டம் நடத்தப்படும் அதன் அடிப்படையில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும், விளம்பரப் பணிகளையும் கடந்த பல மாதங்களாக செய்து வருகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்து ஜி20 மாநாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்கள். இந்த வரும் செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை டெல்லியில் அவர் 3 நாட்கள் தங்குகிறார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் அவர், உலகளாவிய பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்க உள்ளார். இந்த கூட்டத்தின் பல்வேறு இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற இருக்கின்றன.
ஜோ பைடனின் இந்திய பயணம் முக்கியமானது என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணம் 2 நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை வலுப்படுத்தும். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல உலகளாவிய பிரச்சனைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை வழங்குகின்றன.
ஜோ பைடனின் சுற்றுப்பயணத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்திப்பதுடன், இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் என்றும், இந்திய தொழிலதிபர்களையும் அவர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பைடனின் இந்திய பயணம் 2 நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
President Joseph Biden will travel to New Delhi, India, from September 7-10 to attend the G20 Leaders’ Summit. President Biden and G20 partners will discuss a range of joint efforts to tackle global issues, including on the clean energy transition and combatting climate change,… pic.twitter.com/eFmU3g25jH
— ANI (@ANI) August 22, 2023
சர்வதேச பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் அவரது இந்த பயணம் இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக இந்தியாவின் ஆதரவு உறுதிப்படுத்தப்படும்.
காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தகவும் 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும் இந்த பயணமும் உதவும். உலக வங்கியை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்படும். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை வலுப்படுத்தவும் இப்பயணம் உதவும்.” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications