உலக வல்லரசான அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறை தான்.. ஏன் தெரியுமா? கடைசி காரணம் செம ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிலையில், உலக வல்லரசான அமெரிக்கா ஏன் இன்னும் வாக்குச்சீட்டைப் பயன்படுத்துகிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்தியா போல 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தேர்தலை நடத்துவது எல்லாம் அவ்வளவு ஈஸியன காரியம் இல்லை.

வாக்குச்சீட்டு: இவ்வளவு பெரிய வேலையை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்களே முக்கிய காரணம். நமது நாட்டில் பல ஆண்டுகளாகவே இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தான் தேர்தலுக்குப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் கூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. அங்கே வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
முக்கிய காரணம்: சுமார் 20 ஆண்டுகளாகவே அமெரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த பேச்சு இருந்த போதிலும், அது நடக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணமே செக்யூரிட்டி தான். அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் வாக்குப்பதிவு இயந்திரங்களை விட வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதுகிறார்கள். இதுவே முக்கிய காரணமாகும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் நாம் வெறும் பட்டனை அழுத்துகிறோம். அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தான் வாக்கு செல்கிறது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது. விவிபேட்கள் இருக்கே எனச் சொல்லலாம். ஆனால், விவிபேட் சீட்டுகள் எண்ணப்படுவது இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. அதேநேரம் வாக்குச்சீட்டு முறையில் ஒவ்வொரு வாக்கையும் நாமே தான் பதிவு செய்கிறோம். எனவே, நாம் விரும்பிய வேட்பாளருக்குத் தான் வாக்கு செல்கிறது என்பதை நம்மால் உறுதி செய்ய முடிவதாக அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள்.
பாதுகாப்பு: அதேபோல வாக்குச்சீட்டுகள் சைபர் அட்டாகால் பாதிக்கப்படாது. அனைத்து வாக்குகளும் துல்லியமாக எண்ணப்படுவதை வாக்குச்சீட்டு முறையில் உறுதி செய்ய முடியும். ஆனால், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வாக்குச்சீட்டு முறைகளில் கூட கள்ள ஓட்டு உள்ளிட்ட பிரச்சினை இருக்கே என நீங்கள் கேட்கலாம். ஆனால், அவை பெரும்பாலும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே நடக்கும். இதனால் அதிபர் தேர்தல் மொத்தமாகப் பாதிக்காது என்பது அவர்களின் வாதம்.
வாக்குச்சீட்டு முறையில் எதாவது சந்தேகம் என்றால் மாறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியும். மேலும், இந்தியாவைப் போல இல்லாமல் அங்கு மக்கள் தொகையும் குறைவு. இதனால் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடித்துவிடலாம். யார் வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கையைச் செய்ய முடியும். இதற்குத் தனியாகச் சிறப்புப் பயிற்சிகள் தேவையில்லை. மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதே பலருக்கும் சிரமமாக இருக்கும் என்பதும் அமெரிக்கர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை நிராகரிக்க முக்கிய வாதமாக இருக்கிறது.
இது தான் முக்கிய காரணம்: இவை அனைத்தையும் விட முக்கியமான ஒரு காரணம் Decentralization. அதாவது நமது நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் தான் லோக்சபா தேர்தலை நடத்தும். ஆனால், அங்கே அதிபர் தேர்தலை நடத்தும் பொறுப்புகள் மாகாண அரசுகளுக்கே வழங்கப்படுகின்றன. இத்தனை காலம் கடைப்பிடித்து வரும் வாக்குச்சீட்டு முறையில் மாகாண அரசுகள் பெரிதாக எந்தவொரு சிக்கலையும் சந்திக்காததால் அவர்கள் அதைத் தொடரவே விரும்புகிறார்கள்.
மேலும், மாகாண அரசுகளே தேர்தலை நடத்துவதால் வாக்குப்பதிவு நடத்த ஆகும் செலவும் முக்கியமானதாக வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவது, அதை ஆப்ரேட் செய்யச் சொல்லித் தருவது, அதைப் பராமரிப்பது என இதற்கு ஆகும் செலவுகள் ரொம்பவே அதிகம். தொடர்ந்து வாக்குச்சீட்டு முறையை அமெரிக்கர்கள் பயன்படுத்த இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications