டுவிஸ்ட்.. “5 கண் கூட்டாளிகள்” -ஹர்தீப் சிங் கொலையில் கனடாவுக்கு உளவு தகவல் சொன்னதே அமெரிக்கா தானாம்
வாஷிங்டன்: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பான உளவுத் துறை தகவலை கனடாவுக்கு வழங்கியதே அமெரிக்காதான் என அந்நாட்டு ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்பீர் சிங் நிஜ்ஜரை கொலை குறித்த உளவுத்துறை தகவல்களை அமெரிக்கா கனடாவிற்கு வழங்கியதாகவும், ஆனால் இந்த கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தும் குற்றம் சாட்டை சுமத்துவதற்கான தகவல்களை வெளியிட தடைசெய்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

ஐந்து கண்கள் கூட்டாளிகளிடையே பகிரப்பட்ட உளவுத்துறை தகவலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு அதிகாரிகளுக்கும் நிஜ்ஜர் கொலைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் தகவல் இருந்ததாக ஒரு முக்கிய அமெரிக்க அதிகாரி உறுதிபடுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் கூறி இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டணியே ஐந்த கண்கள் என்று அழைக்கப்படுகிறது. நிஜ்ஜர் கொலைக்குப் பின்னர், அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கனடாவை சேர்ந்த தங்கள் சகாக்களுக்கு இந்தியாவின் தலையீடு இருப்பதாக உறுதிபடுத்தும் தகவலை வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
அதே நேரம் நிஜ்ஜர் கொல்லப்படும் வரை இந்த சதித்திட்டம் தொடர்பாகவோ, இதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகவோ இந்த 5 கண் உளவு கூட்டணி அதிகாரிகள் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காலிஸ்தான் தலைவரான நிஜ்ஜரின் கொலை விசாரணையில் கனடா அரசுடன் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா நிஜ்ஜரை தீவிரவாதியாக அறிவித்தது.
ஆனாலும், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புடைய தகவல்களை கனடா அதிகாரிகள் திரட்டி அதன் மூலம் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவின் தலையீடு தொடர்பான தகவல்களை சேகரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மரணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் கனடாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளிடம் இந்த சதித்திட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் இல்லை என்று கூறியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளிடம் ஏதேனும் தகவல் இருந்தால், உளவுத்துறை நிறுவனங்களின் "எச்சரிக்கை கடமை" கொள்கையின் கீழ் அவர்கள் உடனடியாக கனடாவுக்கு தெரிவித்து இருப்பார்கள் என்று விளக்கமளித்து உள்ளனர்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications