700 அடி ஆழத்தில் அதிசயம்.. பூமிக்கடியில் புதைந்திருக்கும் பிரமாண்ட கடல்.. கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்து கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எவன்ஸ்டன் நகரில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கடல் தற்போது பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் ஒன்றிணைத்தால் இருக்கும் அளவை விட மிகப்பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பூமியின் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து பல்கலைழக்கம் சார்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தான் பூமியில் உள்ள கடலை விட பூமிக்கடியில் பெரிய நீர்ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது பூபூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சிறிய கோள்கள் என அழைக்கப்படும் வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதன் காரணமாக தண்ணீர் பூமியில் உருவானதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய இந்த கண்டுபிடிப்பு என்பது பூமியின் ஆழத்தில் இருந்து பூமியில் தண்ணீர் தோன்றி இருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.
இதுபற்றி நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் கூறுகையில், ‛‛ ‛‛நாம் வாழும் பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? இதற்கான விடை என்பது பூமிக்கடியில் இருந்து வந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்கான வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு காட்டுகிறது' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛பூமிக்கடியில் நிகழும் மாற்றங்களை அறிய நிலநடுக்கங்களை பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. 2000 நிலநடுக்கங்களின்போது ஏற்பட்ட 500 நிலஅதிர்வுகளின் அலைகளை ஆராயப்பட்டன. அப்போது நிலநடுக்கம் பூமிக்கடியில் மையம் கொண்டுள்ள தூரத்தை பொறுத்து அதிர்வுகளின் அலைவேகம் என்பது மாறுபட்டது. இந்த அலைவேக மாறுபாட்டை ஆய்வு செய்தபோது பூமிக்கடியில் ஈரமான பாறைகள் இருப்பதும், ஆழம் செல்ல செல்ல அதன் அலைவேக மாறுபாடு குறைந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. இது தான் பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல் அளவை விட 3 மடங்கு பெரிய கடல் மறைந்துள்ளதை கண்டுபிடிக்க உதவியது’’ என்றார்.
முன்னதாக இந்த ஆய்வு குறித்த விபரம் 2014ம் ஆண்டில் வெளியாகி இருந்தது. Dehydration melting at the top of the lower mantle என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் ரிங்வுடைட்(Ringwoodite) எனப்படும் நீல நிற பாறைக்குள் பூமிக்கடியில் பிரமாண்ட கடல் மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications