அமெரிக்க வெள்ளை மாளிகையில் பரபரப்பு! ஆயுதத்துடன் சுற்றிய நபர் மீது சீக்ரெட் சர்வீஸ் துப்பாக்கிச்சூடு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே இன்று மர்மமான முறையில் துப்பாக்கியுடன் சுற்றிய நபர் மீது சீக்ரெட் சர்வீஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வெள்ளை மாளிகை அருகே நடைபெற்று இருக்க கூடிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி நகரில் வெள்ளை மாளிகை உள்ளது. அமெரிக்க அதிபராக இருப்பவரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் இங்கு எப்போதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். உலகில் அதிக பாதுகாப்பு கொண்ட இடங்களில் ஒன்றாக வெள்ளை மாளிகை உள்ளது. அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கு சீக்ரெட் சர்வீஸ் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ள வெள்ளை மாளிகையில், ஒரு துரும்பு கூட அவர்களின் கண்களை மீறி செல்ல முடியாத அளவுக்கு கடுமையான கெடுபிடிகள் இருக்கும்.

இந்த நிலையில்தான் வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து, சீக்ரெட் சர்வீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை. வார இறுதி நாள் என்பதால் புளோரிடாவில் உள்ள Mar-a-Lago இல்லத்திற்கு அவர் சென்று இருக்கிறார்.
வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள ஐசனோவர் நிர்வாக அலுவலகக் கட்டிடம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அந்த நபர் வெள்ளை மாளிகை பகுதிக்கு வந்து இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர். இண்டியானா மாகாணத்தை சேர்ந்த அந்த நபர் வெள்ளை மாளிகை பகுதிக்கு வருவதாக ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரிகள், சீக்ரெட் சர்வீஸ்க்கு அலர்ட் செய்து இருக்கிறார்கள்.
அதன்பிறகுதான், அங்கு வந்த நபர் ஒருவரை அதிகாரிகள் விசாரித்த போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதையடுத்துதான் அந்த நபர் மீது சீக்ரெட் சர்வீஸ் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரின் நிலை என்ன என்பது குறித்து சீக்ரெட் சர்வீஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே நடைபெற்று இருக்க கூடிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications