US Tariff: இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்திய டிரம்ப்! தொடரும் அமெரிக்காவின் அடாவடி
வாஷிங்டன்: இந்தியாவுக்கு ஏற்கனவே 25 சதவீத வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் இன்று கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதன்மூலம் 50 சதவீத வரியை நம் நாட்டின் மீது டிரம்ப் போட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டொனால்ட் டிரம்ப் இந்த அடாவடி வரி விதிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல நாடுகளுக்கும் வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டை இப்போது சீண்ட தொடங்கி உள்ளார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா நமக்கு நட்பு நாடு. இதனால் நாம் எந்த பொருளாதார தடைகளையும் விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி வழக்கம்போல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகிறோம். ஆனால் டிரம்புக்கு இது பிடிக்கவில்லை.
நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை பிரிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். மேலும் தற்போது ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு அதிகப்படியான கச்சா எண்ணெய்களை வாங்கி வருகிறது. இது டிரம்பின் கண்களை உறுத்துகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக டிரம்ப் கூறினார். மேலும் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் நம் நாட்டை எடுத்து கொண்டால் கச்சா எண்ணெயில் 20 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது. மீதமுள்ள 80 சதவீதம் பிற நாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த 80 சதவீதத்தில் ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே 36 முதல் 38 சதவீதம் வரை மாதந்தோறும் கிடைக்கிறது. இதனால் சட்டென ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது. மீறி நிறுத்தினால் அது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் என்பதோடு, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும்.
இதனால் நம் நாடு தொடர்ந்து ரஷ்யாவிடம், கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது டொனால்ட் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
அதன்படி கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications