யுனெஸ்கோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்கா.. கொள்கைக்கு எதிராக போவதாக குற்றச்சாட்டு
வாஷிங்டன்: யுனெஸ்கோ அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது, அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உகந்ததாக என்று சாடியுள்ள டிரம்ப் நிர்வாகம், யுனெஸ்கோ அமைப்பு பிளவுபடுத்தும் சமூக மற்றும் கலாசார காரணங்களை பின்பற்றுகிறது எனக்கூறி அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சி காலத்தின் போது யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருந்தது.
ஐக்கிய நாடுகள் அவையின் கலாசாரம், கல்வி சார்ந்த பிரிவாக யுனெஸ்கோ அமைப்பு உள்ளது. உலக அளவில் பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்டவற்றை யுனெஸ்கோ அமைப்பு மேற்கொண்டு வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னம் என்றால் அதற்கு ஒரு தனி கவுரம் இருக்கும் அளவுக்கு சர்வதேச அளவில் மிக முக்கிய அமைப்பாக ஐநாவின் யுனெஸ்கோ விளங்குகிறது.

அமெரிக்காவின் நலன் கருதி
இந்த நிலையில்தான், யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சி காலத்தின் போது யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருந்தது. அதன்பிறகு ஜோ பைடன் ஆட்சி காலத்தில் மீண்டும் யுனெஸ்கொவில் இணைந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளவுபடுத்தும் விஷயங்கள்
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், பிளவுபடுத்தும் விஷயங்களை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்கா வெளியேறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் டாம்மி ப்ரூஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "பிளவுபடுத்தும் சமூக மற்றும் கலாச்சாரங்களை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ செயல்படுகிறது.
ரோனால்டு ரீகன் ஆட்சி காலத்திலேயே
ஐநாவின் நீடித்த இலக்குகளில் அதிக கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக யுனெஸ்கோ செயல்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்படும் அந்த அமைப்பு பாலஸ்தீனத்தை ஒரு நாடக அங்கீகரித்தது" என்று தெரிவித்தது. யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா டிரம்ப் ஆட்சி காலத்தில் மட்டும் இன்றி அதற்கு முன்பாகவும் வெளியேறி இருக்கிறது.
கடந்த 1980 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ரோனால்டு ரீகன் ஆட்சி காலத்திலும் யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. யுனெஸ்கோ அமைப்பு ஊழல் மிக்கதாக மாறிவிட்டதகவும், சோவியத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக பொறுப்பேற்ற பிறகு மீண்டும் யுன்ஸ்கோ அமைப்பில் அமெரிக்கா இணைந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications